இங்கிலாந்தில் பிரதமர் இறக்கிறார். இவரின் இறுதி சடங்கில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்கா, ரஷியா, இத்தாலி, ஐப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் அதிபர்கள் லண்டனுக்கு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் லண்டனில் வெவ்வேறு இடத்தில் தங்க வைக்கிறார்கள்.
இறுதி சடங்களில் கலந்துக் கொள்ள தயாராகும் சூழ்நிலையில், இவர்கள் அனைவரையும் தீவிரவாதிகள் சுட்டு கொன்று விடுகின்றனர். இதில் அமெரிக்கா அதிபரை சுட்டு கொல்லும் நிலையில், அவரின் பாதுகாவலரான ஜெரார்டு பட்லர் காப்பாற்றுகிறார்.
ஹெலிகாப்டரில் அதிபரை அமெரிக்காவிற்கு அழைத்து செல்லும் நிலையில், ராக்கெட் லான்சர் மூலம் தீவிரவாதிகள் தாக்குகின்றனர். இதில் எதிர்பாராத விதமாக அதிபரும், பாதுகாவலர் ஜெரார்டு பட்லரும் உயிர் தப்பிக்கின்றனர். இதையறிந்த தீவிரவாதிகள் அவரை கொல்ல முயற்சி செய்கிறார்கள்.
இறுதியில் தீவிரவாதிகளின் திட்டத்தை முறியடித்து அமெரிக்கா அதிபரை லண்டனில் இருந்து அமெரிக்காவிற்கு பாதுகாவலர் ஜெரார்டு பட்லர் அழைத்து சென்றாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
படத்தில் பாதுகாவலராக நடித்திருக்கும் ஜெரார்டு பட்லர் சிறப்பாக நடித்திருக்கிறார். தீவிரவாதிகளிடம் போராடும் காட்சிகளில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
முதல் பாதியில் பத்து நிமிட காட்சிகள் மிகவும் சிறப்பாக உள்ளது. அதிபருக்காக தங்களுடைய உயிரையும் கொடுக்குமளவிற்கு பாதுகாவலர்கள் போராடுவதை பிரம்மாண்டமான திரைக்கதையுடன் இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாபக் நஷாபி. பிற்பாதியில் தீவிரவாதிகளுடன் சண்டை போடும் காட்சிகள் வீடியோ கேம் பார்ப்பது போல் இருக்கிறது.
ட்ரவெர் மோரிஸின் இசை படத்திற்கு பெரும் பலம். எட் வைல்டுவின் ஒளிப்பதிவும் சி.ஜி.ஒர்க்கும் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘லண்டன் ஹேஸ் பாலன்’ மிரட்டல்.