எகிப்தில் தங்கள் உடல்களில் ஒவ்வொரு பாகங்களிலும் வெவ்வேறு சக்தி படைத்தவர்கள் தங்களை கடவுள் என்று கூறி மக்களை ஆண்டு வருகிறார்கள். இவர்களின் அரசனுக்கு இரண்டு மகன்கள்.
இவர்களில் இரண்டு பேருக்கும் அந்த நாட்டை பிரித்துக் கொடுக்கும்போது அண்ணனுக்கு நாட்டையும், தம்பிக்கு பாலைவனத்தையும் பிரித்துக் கொடுக்கிறார் அரசன்.
அண்ணனின் அதிகாரத்துக்குட்பட்ட நாட்டில் செல்வம் செழித்து குலுங்க, அதை ஆண்டு அனுபவித்து வருகிறான். ஆனால், தம்பியோ பாலைவனத்தில் எதுவும் இல்லாததால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறான்.
இந்நிலையில், அண்ணன் தன்னுடைய மகன் ஹராசுக்கு மகுடம் சூட்ட முடிவெடுக்கிறார். இதில் பங்குபெற தம்பியான செட் தனது படைகளுடன் நாட்டுக்குள் வருகிறான். அப்போது, சில சூழ்ச்சி வேலைகள் செய்து, அண்ணனை கொன்று அவனது ஆட்சியை கைப்பற்றுகிறார் செட்.
பின்னர், அவரது மகனான ஹாராசையும் கொல்லப் பார்க்கிறார். அப்போது, அவரது மனைவி செட்டிடம் உயிர் பிச்சை கேட்க, ஹராசின் சக்தி இருக்கும் இரண்டு கண்ணையும் பிடுங்கிவிட்டு, அவனை உயிரோடு பாலைவனத்துக்கு அனுப்பிவிடுகிறார் செட்.
பின்னர், அந்த ஆட்சிக்குட்பட்ட கடவுள்களையும், மக்களையும் அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், ஹராசின் கண் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் அடிமையாக பணிபுரியும் தனது காதலியையும், நாட்டு மக்களையும் அடிமைத்தனத்தில் இருந்து மீட்க வேண்டுமானால், அந்த கண்ணை மீட்டு ஹராசிடம் ஒப்படைத்தால், அவனது சக்தி மூலமாக நாட்டை காப்பாற்றலாம் என நினைக்கிறான் பெக் என்ற அடிமை.
இதனால், தனது காதலி மூலமாக அந்த கண் இருக்கும் ரகசிய இடத்திற்குள் நுழைந்து ஒரு கண்ணை கைப்பற்றுகிறான். அப்போது, எதிர்பாராதவிதமாக பெக்கின் காதலி கொல்லப்படுகிறாள்.
காதலி இறந்த சோகத்தில் இருக்கும் பெக், ஹராசை சந்தித்து தனது காதலியை காப்பாற்றினால், அவனுக்கு அந்த கண்ணை கொடுப்பதாக கூறுகிறான்.
இதற்கு ஹராஸ் சம்மதித்து பெக்கின் காதலியை உயிர்ப்பித்தாரா? நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டாரா? என்பதே மீதிக்கதை.
படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை நம்மை வியக்க வைப்பது படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள்தான். அதேபோல், படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அதேபோல், படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் உடை அலங்காரமும் மிகவும் அழகாக இருக்கிறது. சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றும் சீட்டின் நுனிக்கே ரசிகர்களை இழுத்து வரும்.
கண் வைக்கப்பட்டிருக்கும் மர்மங்கள் நிறைந்த அறைக்குள் பெக் நுழையும் காட்சிகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கின்றன. அதேபோல், டிராகனுடன் சண்டை போடும் காட்சிகளும் பிரம்மாண்டத்தின் உச்சக்கட்டம்.
மார்கோ பெல்ட்ராமியின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டத்துடன் ரசிக்க இவரது இசை மிகவும் உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘காட்ஸ் ஆப் ஈஜிப்த்’ ரசிக்கலாம்.