ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று சென்னையில் தனிமையில் வாழ்ந்து வரும் எஸ்.ஏ.சி., ஒருமுறை மாநகர பேருந்து ஒன்றை கடத்திய கும்பலிடம் சண்டை போட்டு பொதுமக்களை காப்பாற்றுகிறார். இதை மாணவி ஒருவர் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். இதன்பிறகு எஸ்.ஏ.சி. பொதுமக்களிடேயே பிரபலமாகிறார்.
இதனால், தனியார் டி.வி.யில் வேலை பார்க்கும் பா.விஜய்யும், எப்.எம்.-ல் வேலை பார்க்கும் சாந்தினியும் எஸ்.ஏ.சி.க்கு அறிமுகமாகிறார்கள். காதலர்களான இவர்களுக்கு எஸ்.ஏ.சி. முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்நிலையில், பேருந்தை கடத்திய கும்பலின் தலைவனான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், போலீசை கைக்குள் போட்டுக் கொண்டு, எஸ்.ஏ.சி.யை பழிவாங்க திட்டமிடுகிறார்.
இதையெல்லாம் அறிந்த எஸ்.ஏ.சி, பா.விஜய்யுடன் சேர்ந்து அவர்களை எப்படி நையப்புடைக்கிறார் என்பதுதான் படத்தின் முழுக்கதை.
75 வயதிலும் ஒருவர் ஹீரோவாக அறிமுகம் ஆகலாம் என்று இந்த படத்தின் மூலம் எஸ்.ஏ.சி. நிரூபித்திருக்கிறார். சண்டைக் காட்சியில் இளம் வயது ஹீரோபோல் நடித்து அசத்தியிருக்கிறார். அதேபோல், செண்டிமென்ட் காட்சிகளிலும், வசனங்கள் உச்சரிப்பிலும் அனுபவ நடிகர்களையும் மிஞ்சுகிறார். பலபேரை ஹீரோவாக்கிய ஒரு இயக்குனருக்கு நடிப்பு வராமலா இருக்கும். ஒவ்வொரு காட்சிகளிலும் குறிப்பாக, அறிமுகமாகும்போது மாஸ் ஹீரோக்களுக்கே மாஸ் காட்டுகிறார்.
பா.விஜய் ஒரு யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கோபம், ஆக்ரோஷம் என நடிப்பில் கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். சாந்தினி தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை அழகாக செய்திருக்கிறார். கமிஷனராக வரும் ஆடுகளம் ‘நரேன்’, அசிஸ்டெண்ட் கமிஷனராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். வில்லனாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்.
நல்லது செய்வதற்கு வயது ஒன்றும் தடை கிடையாது என்பதுபோல் இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் விஜய் கிரண். திரைக்கதையில் விறுவிறுப்பு, வசனங்களில் தெளிவு என அனுபவ இயக்குனர் போல் படத்தை கொடுத்திருக்கிறார். ஆனால், ஒருசில காட்சிகள் அடுத்து என்ன நடக்கும் என யூகிக்கும்படி அமைந்திருப்பது மட்டும் சற்று குறைவாக பார்க்கப்படுகிறது. மற்றபடி, படத்தை ரசிக்கலாம்.
தாஜ்நூர் இசையில் கிளைமாக்சில் வரும் குத்துப்பாடல் ரசிக்கவைக்கிறது. மற்ற பாடல்களும் கேட்கும் ரகம்தான். பின்னணி இசையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘நையப்புடை’ அதிரடியில் கலக்கும்.