மதுரையில் உள்ள இரண்டு கிராமங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் கலெக்டர் 144 தடை உத்தரவு விதிக்கிறார்.
இதில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மதுசூதனன். நகை வியாபாரியான இவர் பல கோடி மதிப்புள்ள தங்கத்தை திருடி பதுக்கி வைக்கிறார். மற்றொரு கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவர் திருட்டு தொழில் செய்து வருகிறார். திருடி அடிக்கடி போலீசில் மாட்டிக் கொள்ளும் சிவாவை, போலீஸ்காரர்கள் திருடுவதற்கு தகுதி இல்லாதவன் என்று கேலி செய்கிறார்கள். இதனால் கோபமடையும் சிவா, மதுசூதனனின் நகை கடையில் கொள்ளையடிக்க திட்டமிடுகிறான்.
அதன்படி, பாலியல் தொழில் செய்து வரும் ஓவியா மூலம் மதுசூதனின் நகை கடையில் கொள்ளையடித்து, நகைகளை ஓவியாவிடம் கொடுத்து ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார் சிவா.
மறுபுறத்தில் மதுசூதனின் மகளான ஸ்ருதி ராமகிருஷ்ணனை, மதுசூதனின் டிரைவர் அசோக் செல்வன் காதலித்து வருகிறான். ஸ்ருதி ராமகிருஷ்ணனிடம் மதுசூதனன் பதுக்கி வைத்துள்ள நகைகளின் சாவி இருக்கிறது. இதனால், மற்றொரு திருடனான முனிஸ்காந்த், ஸ்ருதி ராமகிருஷ்ணனை கடத்தி ஒரு பங்களாவில் வைக்கிறார். இவரை தேடி அசோக் செல்வன் அதே பங்களாவிற்கு வருகிறார்.
சிவா, ஓவியா, அசோக் செல்வன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், முனிஸ்காந்த் அனைவரும் ஒரே பங்களாவில் சந்திக்கிறார்கள். அப்போது முனிஸ்காந்த் பல கோடி மதிப்புள்ள நகைகளை திருடவே ஸ்ருதி ராமகிருஷ்ணனை கடத்தினேன் என்று கூறுகிறார்கள். இதைகேட்ட மற்றவர்கள் அந்த நகைகளை எடுத்து வாழ்க்கையில் செட்டிலாக எண்ணுகிறார்கள்.
ஊருக்குள் 144 தடை உத்தரவு இருப்பதால் அந்த நகைகளை அவர்கள் எடுத்தார்களா? அசோக் செல்வன், ஸ்ருதி ராமகிருஷ்ணன் இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
144 தடை உத்தரவை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். ஆனால், திரைக்கதையை தெளிவில்லாமல் அமைத்திருக்கிறார். சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லியிருக்கலாம். 2 1/2 மணி நேரம் படம் பார்க்கும்போது, 4 மணி நேரம் படத்தை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. அவ்வளவு நீளமான திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார். படத்தில் காமெடிகள் பெரியதாக எடுபடவில்லை. சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனருக்கு, அவர்களை வைத்து வேலை வாங்க தெரியவில்லை.
சிவா, அசோக் செல்வன், ஓவியா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுசூதனன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். முனிஸ்காந்த் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பீலிங்ஸ் ரவி என்னும் கதாபாத்திரத்தில் காமெடி வில்லனாக நடித்திருக்கிறார் உதய் மகேஷ். இவரை வைத்து காமெடி செய்திருக்கிறார்கள். ஆனாலும் பெரியதாக கைகொடுக்கவில்லை.
பல வெற்றி படங்களை தயாரித்து வந்த தயாரிப்பாளர் சி.வி.குமார், இப்படம் மூலம் சறுக்கலை சந்தித்திருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். குருதேவ்வின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரே பலம்.
மொத்தத்தில் ‘144’ வலுவில்லை.