வேலைக்கு போகாமல் வெட்டியாக ஊர் சுற்றி வருகிறார் நாயகன் ஸ்ரீதர். இவரது தந்தையான மயில்சாமியிடம் செலவுக்கு காசு வாங்கி, அந்த பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து குடியும், கும்மாளமுமாக இருக்கிறார் நாயகன்.
ஒருநாள் கல்லூரியில் படிக்கும் நாயகியை பார்க்கிறார். பார்த்தவுடனே அவள்மீது காதல்வயப்படும் நாயகன் அவள் பின்னாடியே சுற்றி வருகிறார். ஒருகட்டத்தில் நாயகியும் நாயகனின் காதலை ஏற்றுக் கொண்டு, இருவரும் காதலித்து வருகிறார்கள்.
இந்நிலையில், நாயகனுடைய நண்பர்களில் ஒருவன் மது குடித்துவிட்டு, இறந்துவிடுகிறான். அவன் போலியான மது சாப்பிட்டுத்தான் இறந்துபோனான் என்பது அப்போது யாருக்கும் தெரியாததால் அதை அலட்சியமாக விட்டு விடுகின்றனர்.
பின்னர், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வரும் சிங்கம்புலி, ஊரில் கவுன்சிலராக வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார். அவரின் ஆசையை புரிந்து கொண்ட நாயகன், அவரிடம் அதிக பணம் இருப்பதை அறிந்து, அவருக்கு உதவுவதாக கூறி, சிங்கம் புலியிடமிருந்து பணத்தை கறக்கிறார்.
அவரிடமிருந்து கறந்த பணத்தை கொண்டு தனது தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறார் ஸ்ரீதர். திருமணத்துக்கு முந்தைய நாள், தங்கையை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் நண்பர்களுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுக்க, அப்போது, அவர் மது குடித்து இறந்து போகிறார்.
அவர் போலி மது குடித்துதான் இறந்து போயிருக்கிறார் என்பது நாயகன் உள்பட அனைவருக்கும் தெரிய வருகிறது. இதே போலி மதுவால்தான் தனது நண்பனும் உயிரிழந்தான் என்பது ஸ்ரீதருக்கு தெரிய வருகிறது. இதனால் தனது தங்கையின் வாழ்க்கையும் கேள்விக்குறியானதை நினைத்து வருந்துகிறார்.
இதற்கு முடிவுகட்ட போலி மதுவுக்கு பின்னால் இருக்கும் கும்பலை கண்டுபிடித்து அழிக்க முடிவெடுக்கிறார். அந்த கும்பலின் தலைவனோ, தனது தொழிலுக்கு எதிராக இருக்கும் போலீசாரை கொன்று, பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறான். இவரை நெருங்க போலீஸே பயப்படுகிறது.
இறுதியில், அந்த போலி மது கும்பலை நாயகன் ஒழித்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.
இதுவரை டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் கலக்கிய ஸ்ரீதர், நாயகன் அவதாரம் எடுத்திருக்கும் படம். நாயகனுக்குண்டான அத்தனை அம்சங்களும் இவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. வசனங்கள் உச்சரிப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.
நாயகி ஸ்பூர்த்தி சுரேஷ் பார்க்க அழகாக இருக்கிறார். நாயகனை திட்டுவதும், பின்னர் அவருடன் கொஞ்சி பழகுவதுமென இவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. மயில்சாமி பொறுப்பான அப்பாவாக மனதில் பதிகிறார். சிங்கம் புலி வரும் காட்சிகள் எல்லாம் நகைச்சுவைக்கு 90 சதவீதம் கியாரண்டி. படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரமேஷ் ரெட்டி, கிடா மீசையுடன் மிரட்டுகிறார். சாராய தொழில் செய்யும் பெரிய தாதாவாக அசத்தியிருக்கிறார்.
மதுவுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், மதுவுக்கு எதிரான ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குனருக்கு ராகௌவ் மாதேஷுக்கு சபாஷ் போடலாம். சமூகத்துக்கு நல்லதொரு கருத்தை சொல்ல வந்திருக்கும் இயக்குனர், கூடவே நகைச்சுவையையும் கொடுத்து, மக்களுக்கு மனதில் அந்த கருத்து எளிதில் பதியும் படி செய்திருக்கிறார். ஆனாலும், காட்சிகளை இன்னும் கொஞ்சம் ரசிக்கும்படியாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்திரவர்மன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசை ஓ.கே. சினிடெக்சூரி ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் பலம் கூட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் ஸ்ரீதரின் வேகமான நடனத்துக்கு இவருடைய கேமராவும் வேகம் காட்டியிருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘போக்கிரி மன்னன்’ மன்னாதி மன்னன்.