ஐ.எம்.எப் என்ற உளவு அமைப்பை சி.ஐ.ஏ தடை செய்கிறது. இதனால், ஐ.எம்.எப். அமைப்பில் இருந்து அனைவரும் சிஐஏ அமைப்பிற்கு மாற்றப்படுகிறார்கள். ஐ.எம்.எப் அமைப்பில் உயர் பதவியில் இருக்கும் ஈத்தன் ஹண்டுக்கு தன்னுடைய அமைப்பை தடை செய்தது வருத்தமளிக்கிறது.
இந்நிலையில், சிண்டிகேட் என்ற அமைப்பு உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்த செயல்பட்டு வருவது ஈத்தன் ஹண்டுக்கு தெரிய வருகிறது. ஆனால், இதை சிஐஏ ஏற்க மறுக்கிறது. எனவே, ஈத்தன் ஹண்ட் மட்டும் தனியாளாக செயல்பட்டு அந்த அமைப்பை கண்டறிய முற்படுகிறார்.
நாளடைவில் இவரது முயற்சிக்கு ஐ.எம்.எப்.பில் ஈத்தனுடன் பணிபுரிந்த அவரது நண்பர்களும் உதவுகிறார்கள். இறுதியில், சிண்டிகேட் அமைப்பை கண்டுபிடித்து உலகை பேரழிவிலிருந்து ஈத்தன் ஹண்ட் காப்பாற்றினாரா? தனது ஐ.எம்.எப். அமைப்பை மீண்டும் கொண்டு வந்தாரா? என்பதே மீதிக்கதை.
ஹாலிவுட் படங்களில் தொடர் பாகங்களுடன் அதிக படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில படங்களே மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வரிசையில் மிக முக்கிய இடத்தில் இருப்பது மிஷன் இம்பாசிபில்.
டாம் க்ரூஸ், ஜெரேமி ரின்னர், ரெபேக்கா பெர்க்யூசன் போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் இதன் ஆறாவது பாகமாக வந்திருக்கிறது மிஷன் இம்பாசிபில் - முரட்டு தேசம்.
இந்த பாகத்தில் டாம் க்ரூஸின் சாகசங்களுக்கு பஞ்சமே கிடையாது, படத்தின் ஆரம்ப காட்சியிலேயே பறக்கும் விமானத்திலிருந்து தொங்குவது, சுழல் நீரில் குதிப்பது, அதிவேகமாக பைக் ஓட்டுவது என அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களை ரசிக்க வைக்கிறார்.
கதாநாயகி ரெபேக்கா பெர்க்யூசன் டாம் க்ரூஸ்க்கு இனையாக நடித்துள்ளார். சைமன் பெக், ஜேரெமி ரின்னர், விங்க் ராம்ஸ் ஆகியோரும் தங்கள் வேலையை சரியாக செய்துள்ளனர். வில்லனாக நடித்த சீன் ஹாரிஸுக்கு பெரிய வேலை இல்லை.
படத்தின் இடையே தொய்வு ஏற்பட்டாலும் படத்தின் முடிவை சீட்டின் நுனிக்கு கொன்டு வந்திருக்கிறார் இயக்குனர் கிரிஸ்டோபர் மெக்கியூரி. படத்திற்கு மற்றொரு பக்க பலம் இசை. அதை ஜோ கிரீமர் மிக நேர்த்தியாக செய்துள்ளார்.
ராபர்ட் எல்விஸ்ட்டின் தனது நேர்த்தியான ஒளிப்பதிவால் படத்தின் பிரமாண்டத்தை கண்முன் கொன்டுவந்துள்ளார். எடி கேமில்டன் படத்தொகுப்பு எந்த தொய்வையும் தராமல் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் 'மிஷன் இம்பாசிபில் - முரட்டு தேசம்’ சாகசங்கள் நிறைந்த தேசம்.