ஸ்பெஷல் ஐ டி திரைப்படம் சமூக விரோத கும்பல் ஒன்றை கூண்டோடு பிடிக்க காவல் துறை அதிகாரி ஒருவர் மேற்கொள்ளும் முயற்சிகளை காண்பிக்கிறது. விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக எடுக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் ஐடி - யின் கதாநாயகனாக வரும் டோனி யென் கடமை தவறாத காவல் துறை அதிகாரி. இவர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் கும்பலில் ஒரு உறுப்பினர் போல நடித்துக்கொண்டே அந்த கும்பலின் செயல்களை கண்காணித்து வருகிறார். மேலும், அவரது நடவடிக்கையால் அக்கும்பலின் தலைவனான சியாங்கின் நன்மதிப்பை பெறுகிறார்.
தனது உண்மையான அடையாளத்தை யாரும் கண்டறிய கூடாது என்பதில் யென் உறுதியாக உள்ள நிலையில், அக்கும்பலில் தலைவன் தன்னை வேவு பார்க்க வரும் காவல் துறையினரை கொடூரமாக கொலை செய்வது கதாநாயகனை அச்சுறுத்துகிறது. இந்த சூழலில் டோனி யென்னிற்கு மற்றொரு சமூக விரோதியை கொலை செய்ய உத்தரவு வருகிறது. ஒரே நேரத்தில் காவல் துறையையும், சமூக விரோத கும்பலையும் சமாளிக்க வேண்டும் என்பதால் தன்னுடைய அடையாளத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள கவனமாக இருக்கிறார்.
இந்நிலையில், யென் தன்னுடன் பணிபுரியும் நேர்மையான காவல் துறை அதிகாரியான ப்பாங் மீது காதல் வயப்படுகிறார். இக்கட்டான தருணத்தில் யென் எவ்வாறு சமூக விரோத கும்பலை தனது காதலியின் துணையோடு அழித்தார் என்பதையும் அவர் அதிகமாக நேசிக்கும் அவரது தாய்க்கு விரோதிகளால் எந்த சிக்கலும் வராமல் காப்பாற்றினாரா என்பதையும் இயக்குனர் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்.
படத்தின் கதைக்கரு சுவாரஸ்யமாக இருந்தாலும், அதன் திரைக்கதையில் விறுவிறுப்பு இல்லாமல் இருக்கிறது. படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களின் கதாப்பத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். பீட்டர் பவுவின் ஒளிப்பதிவும், பிரூஸ் லாவின் சண்டை காட்சி அமைப்பும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஸ்பெஷல் ஐடி’ ஸ்பெஷல்.