நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் கருணாஸ், மனைவி இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் கந்து வட்டி உள்ளிட்ட பல கடன் பிரச்சனையில் அவதிப்பட்டு வருகிறார். இதனால் ஒரு ஸ்டூடியோவில் இருந்து பணத்தை திருட முயற்சி செய்கிறார்.
அதன்படி பணத்தை எடுத்து திரும்பும் நிலையில், இவர் அந்த ஸ்டூடியோவில் இருந்து வெளியே வராத நிலையில் மாட்டிக்கொள்கிறார். இரண்டு நாட்களில் ஸ்டூடியோ திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் அங்கேயே தங்குகிறார். இந்நிலையில் அந்த ஸ்டூடியோவின் மேனேஜர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார். இதனால் அந்த ஸ்டூடியோ மேலும் இரண்டு நாட்கள் மூடப்படுகிறது.
உண்ண உணவு கூட இல்லாத நிலையில் அந்த ஸ்டூடியோவில் இருந்து கருணாஸ் எப்படி வெளியே வந்தார்? கடன்களை அடைத்தாரா? என்பதே மீதிக்கதை.
கருணாஸ் சிறு இடைவேளைக்குப் பிறகு கதாநாயகனாக நடித்திருக்கிறார். தான் நடித்த முதல் படத்தின் கதாபாத்திரமான ‘லொடுக்கு பாண்டி’ என்ற பெயரையே இப்படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார். அந்தப் படத்தில் திருடனாக வருவதுபோல் இப்படத்திலும் திருடனாக வந்திருக்கிறார். ஒரு அறைக்குள் மாட்டிக் கொண்டு இவரை சுற்றியே கதை நகர்கிறது. ஆரம்பத்தில் ரசிக்க முடிந்த இவரை காட்சிகள் நகர நகர ரசிக்க முடியாமல் இருக்கிறது. ஒரு அறைக்குள் மாட்டிக்கொண்டு இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. கருணாசின் காமெடி பெரியதாக எடுபடவில்லை.
கருணாசுக்கு மனைவியாக நேகா சக்சேனா நடித்திருக்கிறார். இவருக்கு படத்தில் அதிக வேலையே இல்லை. கந்து வட்டிக்காரராக வரும் காதல் தண்டபானி, வீட்டு உரிமையாளராக வரும் மனோபாலா ஆகியோர் காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார்கள்.
கருணாசை வைத்து முழுக்க முழுக்க காமெடி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரஜனீஷ். ஆனால் படத்தில் காமெடி இருந்தாலும் அதை ரசிக்க முடியவில்லை. படம் முழுக்க கருணாசை வைத்தே அதிக காட்சிகளை எடுத்திருக்கிறார். இதனால் சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. ஒரே ஸ்டூடியோவில் கருணாசை வைத்தே திரைக்கதை முழுவதும் அமைத்து ரசிகர்களை போரடிக்க வைத்திருக்கிறார். கூடுதல் கதாபாத்திரங்களை வைத்து சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் ரசித்திருக்கலாம்.
தியாகராஜன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஒரெ ஸ்டூடியோவில் காட்சிகள் இருப்பதால் ஜெய் ஆனந்த்தின் ஒளிப்பதிவிற்கு அதிக வேலை இல்லை.
மொத்தத்தில் ‘லொடுக்கு பாண்டி’ மிடுக்கு இல்லை.