சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நாயகன் ரஜத்தை, பாண்டு தத்தெடுத்து தனது மகன்போல் வளர்த்து வருகிறார். பாண்டுவுக்கு ஒரு மகளும் இருக்கிறார். ரஜத்துக்கு சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என்று ஆசை. அந்த லட்சியத்துடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார்.
சென்னையில் நண்பர்கள் அறையில் தங்கி கதை எழுதுகிறார். கதை எழுதி முடித்தபிறகு, அதை படமாக எடுப்பதற்காக தயாரிப்பாளர் தேடி அலைகிறார் ரஜத். இந்நிலையில், இவர்கள் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகளான அஸ்மிதா, நாயகனை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், நாயகனோ ஊரில் இருக்கும் தனது மாமன் மகளை காதலிக்கிறார்.
இந்நிலையில், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் ஒரு கும்பல், இவரது கதையை படமாக்க முன்வருகிறது. ஆனால், நாயகனோ, கறுப்பு பணத்தை வைத்து தனது படத்தை எடுக்கக்கூடாது என்பதில் விடாபிடியாக இருக்கிறார். இருப்பினும், தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இதற்கு சம்மதிக்கிறார்.
அதன்படி, நாயகன் படத்தை எடுத்து வெற்றி படமாக்குகிறார். ஆனால், இவர் படம் எடுத்தது கறுப்பு பணத்தில்தான் என்று பத்திரிகைகள் எல்லாம் இவரை தவறாக சித்தரித்து பிரசுரிக்கிறது. இதனால் தன் தவறை மறைப்பதற்காக கறுப்பு பண கும்பலை பத்திரிகைகளுக்கு காட்டிக் கொடுக்கிறார் ரஜத். இதனால், கறுப்பு பணக் கும்பல் ரஜத் மீது வெறுப்படைகிறது. அவரை எப்படியாவது பழிவாங்க துடிக்கின்றனர்.
இறுதியில், கறுப்பு பண கும்பலிடமிருந்து ரஜத் தப்பித்தாரா? தன் மீது விழுந்த பழியை துடைத்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ரஜத் சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞனாக நடிக்க முயற்சித்திருக்கிறார். நடிப்பில் இன்னும் தேர்ச்சி பெறவேண்டும். பல படங்களில் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வந்த ‘மஸ்காரா’ நாயகி அஸ்மிதா, இந்த படத்தில் ஹீரோயின் வேடமேற்றிருக்கிறார். நடிப்பில் ஓகேதான். மற்றபடி, படத்தில் நிறைய நாயகிகள் வலம் வந்தாலும், யாரும் மனதில் நிற்கவில்லை.
நடிகர் ரஜத்தே இப்படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். தேவையற்ற காட்சிகளை படம் முழுக்க இருப்பதால் படம் மிகவும் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், கோர்வையான காட்சிகளும் இல்லாதது படத்திற்கு பெரும் பின்னடவே. சங்கர்-கணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. இவர் ஒரு பாடலுக்கு நடனம் வேறு ஆடியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘இயக்குநர்’ தேர்ச்சியில்லை.