கதாநாயகன் அஸ்வின் மிகவும் அப்பாவி. இவர் தனது அப்பாவின் கண்டிப்புடன் வளர்ந்து வருகிறார். இவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள். ஒருநாள் இவருக்கு பிறந்தநாள் வருகிறது. அந்த பிறந்தநாள் விழாவில் இவரது நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். தன்னுடைய அப்பா பிறந்தநாள் பரிசாக ஒரு விலையுயர்ந்த போனை தனக்கு பரிசளித்தாக தனது நண்பர்களிடம் கூறுகிறார் நாயகன்.
அவர்கள் அந்த போனை வாங்கி, அதில் ஆபாச படங்களை புகுத்தி நாயகனிடம் காட்டுகிறார்கள். அதுவரை இதுபற்றியெல்லாம் யோசிக்காத நாயகனுக்கு, செக்ஸ் மீது ஆசை வருகிறது. ஆகையால் எப்படியாது ஒரு பெண்ணை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையோடு சுற்றி வருகிறார்.
இந்நிலையில், தனது வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் தங்கையின் தோழி மீது நாயகன் ஆசைப்படுகிறார். அவளை எப்படியாவது காதல் வலையில் வீழ்த்தி அனுபவித்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். இவன் விரித்த காதல் வலையில் அவள் விழுந்துவிட்டாலும், அவனுடைய காம வலையில் சிக்காமல் தப்பித்து விடுகிறாள். அவனுடனான காதலையும் வெறுக்கிறாள்.
காதலிலும், காமத்திலும் தோல்வியடைந்த நாயகன் நண்பர்களுடன் குடித்துவிட்டு கலாட்டா செய்து கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் நாயகனுக்கு ஒரு போன் கால் வருகிறது. எதிர்முனையில் பேசும் ஒரு பெண் தனக்கு அடிபட்டுவிட்டதாகவும், உடனடியாக ஒரு மருத்துவரை அனுப்பி வைக்கும்படியும் கூறுகிறாள். போதையில் அவளது பேச்சை அலட்சியப்படுத்தும் நாயகன், பின்னர் சுதாரித்துக் கொண்டு, அவள் சொன்ன முகவரிக்கு ஒரு டாக்டரை அனுப்பி வைக்கிறாள்.
முகம் தெரியாத தனக்கு உதவி செய்த நாயகனுக்கு மறுபடியும் போன் செய்து நன்றி கூறுகிறாள் நாயகியான லதா. லதாவுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. லாரி டிரைவரான தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு, தன்னை கொடுமைப்படுத்துவதை நாயகனிடம் கூறுகிறாள். இதனால், அவள் மீது நாயகன் இரக்கப்படுகிறான். இது நாளடைவில் இருவருக்குள்ளும் கள்ளக்காதலாக மாறுகிறது.
இந்த கள்ளக்காதல் விஷயம் ஒருநாள் லதாவின் கணவனுக்கு தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின், அப்பாவி கதாபாத்திரத்திற்குத்தான் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். மற்றபடி, காதல் காட்சிகளிலும், ரொமான்ஸ் காட்சிகளிலும் ரொம்பவும் அப்பாவி போல் நடித்திருப்பது நமக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. காதல் கணவனிடம் அடிவாங்கும் போதும், தனது சோகத்தை அஸ்வினிடம் எடுத்துக்கூறும் காட்சிகளிலும் நாயகி லதா சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஆனால், இவரை ஒரு கதாநாயகியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
மேலும், இந்த படத்தில் நடித்திருக்கும் பிற கதாபாத்திரங்களில் அவ்வப்போது வந்து வந்து போயிருக்கிறார்கள். அவர்களின் நடிப்பு எதுவும் மனதில் நிற்கவில்லை. இயக்குனர் கே.பி.கணேஷ், ஒரு அப்பாவி இளைஞனை செக்ஸ் என்பது எந்த நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை மையப்படுத்தி படத்தை எடுத்திருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருந்தால் ரசித்திருக்கலாம். தேவையில்லாத பல விஷயங்களை புகுத்தி ரொம்பவும் போரடிக்க வைத்திருக்கிறார். படத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல், ரசிகர்களை கிரங்கடிக்கும் காட்சிகளும் இல்லாதது படம் பார்ப்பவர்களுக்கு ரொம்பவும் வருத்தமே.
மொத்தத்தில் ‘தேகம் சுடுகுது’ சுடவில்லை.