சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார் ஸ்ரீ. இவருடன் கலகலப்பு பாலாஜியும் வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீ, தான் காதலிக்க எந்த பெண்ணும் கிடைக்காத நிலையில் தன் தந்தையிடம் தனக்கு பெண் பார்க்கும் படி கூறுகிறார்.
அதன்படி, ஸ்ரீயின் தந்தை ஸ்ரீக்கு நாயகி நிரஞ்சனாவை பெண் பார்க்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவருக்கும் பிடித்துப்போக இருவருக்கு நிச்சயதார்த்தம் நடக்கிறது. இருவரும் தங்களைப் பற்றி புரிந்துக் கொள்ள அடிக்கடி வெளியில் சந்திக்கிறார்கள். அப்படி ஒரு நாள் இவர்கள் ஷாப்பிங் முடித்து விட்டு வரும் போது, ஒரு சிறுவனை இவர்கள் காருக்குள் பார்க்கிறார்கள்.
அவனிடம் நீ யார் என்று கேட்க, அதற்கு அந்த சிறுவன் தன் பெயரை சோன் பப்டி என்று கூறுகிறான். பின்னர் வீட்டின் விலாசத்தை கேட்க, அவன் மாற்றி மாற்றி சொல்லி அவர்களை சுற்றவிடுகிறான். அதன்பின் ஒரு வழியாக சிறுவனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து விடலாம் என்று முடிவு செய்யும் நிலையில் பெசன்ட்நகர் ரவி, ஸ்ரீக்கு போன் செய்து ‘அந்த சிறுவனை ஒப்படைக்காவிட்டால் உன் நண்பனை கொன்று விடுவேன்’ என்று மிரட்டுகிறான்.
இதைகேட்டு அதிர்ச்சியடையும் ஸ்ரீ, அந்த சிறுவனை அழைத்துச் சென்று பெசன்ட் நகர் ரவியிடம் ஒப்படைத்து தன் நண்பனை மீட்டானா? அந்த சிறுவன் யார்? அவன் எதற்காக ஸ்ரீயிடம் வந்தான் என்பதை காமெடி கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீ, கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆனால், அவரது முந்தைய படங்களைவிட இந்த படம் பெயர் சொல்லும் படமாக அமையவில்லை. இன்னும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம்.
நாயகியாக நடித்திருக்கும் நிரஞ்சனா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். நண்பனாக நடித்திருக்கும் பாலாஜி, சோன் பப்டி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் ஆகியோர் அவர்களுக்கு உண்டான கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். மற்றபடி எந்த கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை.
நகைச்சுவை படத்தை கையில் எடுத்துக் கொண்ட இயக்குனர் ஷிவானி, நகைச்சுவைக்கு அதிகம் இடம் கொடுக்க மறந்திருக்கிறார். படத்தில் சிரிப்பதற்கான வாய்ப்பு குறைவு. மேலும் ரசிக்கும்படியான காட்சிகளையும் குறைவாகவே அமைத்திருக்கிறார். நல்ல கதாபாத்திரங்களை கையில் வைத்துக் கொண்டு அவர்களை கையாளத் தெரியாமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.
தனிராஜ் மாணிக்கம் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். தாணு பாலாஜி ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘சோன் பப்டி’ சுவை குறைவு.