படத்தின் நாயகன் அமெரிக்க அதிபராக நடித்தால் அந்த படம் மெகா ஹிட்டாகிவிடும் என்ற வழக்கமான ஹாலிவுட் விதிப்படி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள படம் 'பிக் கேம்'. அமெரிக்க அதிபரான சாமுவேல் ஜாக்சன் பயணிக்கும் விமானத்தை தீவிரவாதிகள் தாக்கி அழிக்க நினைக்கின்றனர். இதனால் அவர் பயணிக்கும் விமானத்தை அவசரமாக தரையிறக்க அதிகாரிகள் நினைக்கின்றனர். கருவிகள் மூலம் அவரது விமானத்தை இயக்கி பின்லாந்து தேசத்தில் தரையிறக்குகின்றனர்.
ஆனால், அங்கு அவர் சந்திக்கும் முதல் நபரான சிறுவன், கையில் வில் அம்புடன் அவர் தலையை குறி வைத்து காத்திருக்கிறான். அந்த சிறுவன் எதற்காக அதிபரை கொல்ல நினைக்கிறான்? தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து அதிபர் காப்பாற்றப்பட்டாரா? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கியிருக்கிறார்கள்.
ஹீரோவோ, வில்லனோ தான் ஏற்கும் கதாபாத்திரத்தில் தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் புகழ்பெற்ற நடிகரான சாமுவேல் ஜாக்சன் இந்த படத்தில் அமெரிக்க அதிபராக நடித்துள்ளார். இவரது நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம்.
‘கடினமாக தோற்றமளிப்பதற்கு மாறாக, நாம் கடினமானவர்களாக மாற வேண்டும்’ என்று அமெரிக்க அதிபருக்கே அறிவுரை சொல்லும் வேடத்தில் நடித்திருக்கும் சிறுவனின் நடிப்பு அசத்தல். ஒருமுறை துப்பாக்கியை சரியாக இயக்கத்தெரியாமல் தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் அதிபர், அதே துப்பாக்கியை வெற்றிகரமாக இயக்கி தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளும் இடம் கிளாசிக்.
உலகின் சக்தி வாய்ந்த மனிதரான அமெரிக்க அதிபருக்கும் அந்த சிறுவனுக்கும் இடையே உண்டாகும் நெருக்கம் படத்தில் நுட்பமாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் அதிபரைக் கொல்ல திட்டமிடும் தீவிரவாதிகள், அதிபரை மீட்கப் போராடும் பெண்டகன் ராணுவம் என்று படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் உச்சக்கட்ட விறுவிறுப்புடன் நகர்கிறது.
தீவிரவாதிகளிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறார்கள் என்று ரசிகர்கள் நகத்தைக் கடிக்க ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கிளைமாக்ஸ் காட்சியை அமைத்திருப்பது மேலும் சிறப்பு.
மொத்ததில் ‘பிக் கேம்’ விறுவிறுப்பான ஆட்டம்.