கலப்பு தற்காப்பு கலை மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு பெருமளவில் பணம் ஈட்டும் கும்பலின் தலைவனிடம் சிக்கும் படத்தின் நாயகன் மற்றும் அவனது மனைவி சூதாட்ட கும்பலிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? என்பது தான் 'டெத் வாரியர்' படத்தின் கதை.
இந்த படத்தின் கதையை எழுதி தயாரித்துள்ள ஹெக்டர் ஏகவாரியா, படத்தில் ரெய்னெரொ என்னும் கலப்பு தற்காப்பு கலை வீரராக வருகிறார். ஒருநாள் இரவு இவரது வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தும் ஒரு கும்பல் இவரையும் இவரது மனைவி கிராவையும் இவான் எனும் நபரிடம் அழைத்து செல்கிறது.
உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற சண்டை கலைஞர்களை மிரட்டி அவர்களை வேறு ஒருவருடன் மோதவிட்டு சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பலின் தலைவராக இவான் இருக்கிறார். தனது திட்டத்திற்கு ரெய்னெரொ ஒப்புக்கொள்ள கூறுகிறார் இவான்.
இதற்கு ரெய்னெரொ மறுக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த இவான், ரெய்னெரொ மனைவியின் வயிற்றில் நச்சுத்தன்மைக் கொண்ட மருந்தை செலுத்துகிறான். அந்த மருந்தினால் கிரா உடல்நலம் குன்றி மெல்ல மெல்ல உயிர் இழப்பாள் எனவும் மிரட்டுகிறான்.
இதிலிருந்து எப்படியாவது தனது மனைவியை காப்பாற்றி, தானும் தப்பிக்க நினைக்கிறார் ரெய்னெரொ. கடைசியில், ரெய்னெரொ என்ன முடிவெடுத்தார்? அவரும், மனைவியும் அங்கிருந்து எப்படி தப்பித்தார்கள்? என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
கடந்த 2009-ஆம் ஆண்டே ஆங்கிலத்தில் வெளிவந்த படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான ஆக்ஷன் படமாக இருந்தாலும், பார்வையாளர்களை முழுவதுமாக திருப்திபடுத்தவில்லை.
படத்தின் ஹீரோவாக வரும் ஹெக்டர் ஏக்வாரியாவின் நடிப்பு படத்தில் சுத்தமாக எடுபடவில்லை. ஆனால், இவான் எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிக் மன்குசோ மட்டும் நடிப்பில் நம்மை வெகுவாக கவர்கிறார். இவரது வில்லத்தனம் அனைவரையும் பயமுறுத்துகிறது.
பில் கர்கொரன் என்ற திறமையான இயக்குனரின் இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படத்தில் விறுவிறுப்பான சண்டைக்காட்சிகள், வலிமையான திரைக்கதை, சுவராஸ்யமான காட்சிகள் என எதுவுமே இல்லாதது படத்திற்கு மிகப்பெரிய குறைதான். இதுதவிர படத்தில் நிறைய லாஜிக் பிழைகளும் உள்ளன.
மொத்தத்தில் ‘டெத் வாரியர்’ போராடவில்லை.