மதுரையில் நாடக கம்பெனி நடத்தி வருகிறார் நாசர். இவரிடம் சிறுவயதில் சித்தார்த் மற்றும் பிரித்விராஜ் இருவரும் சேருகிறார்கள். அங்கேயே வளர்ந்து பெரியவனாகிறார்கள். நாடகத்தில் முக்கிய கதாபாத்திரமான ராஜபாட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கனவோடு வாழ்ந்து வருகிறார் பிரித்விராஜ். சித்தார்த் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். ஒரு கட்டத்தில், சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் வேதிகாவும் அவருடைய அம்மாவான குயிலியும் இந்த கம்பெனியில் வந்து சேருகிறார்கள்.
இதுவரை ராஜபாட் வேடத்தில் நடித்து வந்த பொன்வண்ணன், நாசரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாடக கம்பெனியை விட்டு செல்கிறார். இதன் பிறகு பிரித்விராஜ் தனக்கு ராஜபாட் கதாபாத்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார். இந்த வாய்ப்பை வழங்குவதற்காக பிரித்விராஜ் மற்றும் சித்தார்த்தை அழைத்து ராஜபாட் வசனத்தை பேச சொல்லி நடிக்க சொல்கிறார் நாசர். இந்த தேர்வில் சித்தார்த் திறமையாக நடித்து ராஜபாட் கதாபாத்திரத்தை கைப்பற்றுகிறார்.
இதனால், சித்தார்த் மீது கோபப்படுகிறார் பிரித்விராஜ். ஒவ்வொரு தடவையும் சித்தார்த் தன்னுடைய நடிப்பால் மேடையில் கைதட்டலை பெறும்போது, பிரித்விராஜின் கோபம் மற்றும் பொறாமையும் அதிகரிக்கிறது. இது, வன்மமாக மாற, அவர்களுக்கிடையே உருவான இந்த பனிப்போர் எப்படி முடிகிறது என்பதை நாடகத் தன்மையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் நாடகத்தை பற்றியும் நாடக கலையை பற்றியும் தெரியாத சூழ்நிலையில் நாடகத்தை மையமாக வைத்து முழு நேர நாடக வடிவிலேயே திரைக்கதை அமைத்து இயக்கியதற்கு இயக்குனர் வசந்த பாலனுக்கு பாராட்டுக்கள். இதில் திறமையான நடிகர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை அமைத்து வெற்றி கண்டிருக்கிறார்.
சுதந்திர காலத்துக்கு முந்தைய கால கட்டங்களை அப்படியே நம் கண்முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர். முதலில் கமர்ஷியல் படத்தை இயக்கிய வசந்த பாலனா என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.
சித்தார்த்திற்கு இப்படம் பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாடகத்தில் மட்டுமில்லாமல் நிஜத்திலும் கைத்தட்டலை பெறுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார். இவருக்கு போட்டியாக பிரித்விராஜ் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். பொறாமை எண்ணத்துடன் இவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இருவரும் போட்டி போட்டு நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
முதல் காட்சியிலேயே மனதில் பதிகிறார் வேதிகா. அழுத்தமான நடிப்பை இறுதி வரை பதிவு செய்திருக்கிறார். நாசர், பொன்வண்ணன் ஆகியோரும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
பாடல்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். இப்பாடல் காட்சிகளை நீரவ் ஷாவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கூடுதல் ரசனை ஏற்படுகிறது. காலத்திற்கு ஏற்றாற்போல் ஒளிப்பதிவை செதுக்கியிருக்கிறார்.
மொத்தத்தில் ‘காவியத்தலைவன்’ காவியத்தில் இடம் பெறுவான்.