நேக்கட் என்ற வார்த்தையை பயன்படுத்தி படம் எடுத்துவரும் ஹாங்காங்கை சேர்ந்த தயாரிப்பாளர் வாங் ஜிங்கின் அடுத்த படம் நேக்கட் சோல்ஜர். இதற்கு முன் இதே தயாரிப்பாளர் தான் நேக்கட் கில்லர் மற்றும் நேக்கட் வெப்பன் ஆகிய சண்டைக்காட்சிகள் நிறைந்த திரைப்படங்களை தயாரித்தார்.
இந்த இரு படங்கள் சேர்ந்த கலவையாக தற்போது நேக்கட் சோல்ஜர் உருவாகியுள்ளது. இப்படம் தமிழில் அசத்தல் அழகிகள் என்ற பெயரில் வந்திருக்கிறது.
1980 ஆம் ஆண்டில் இருந்து படம் தொடங்குகிறது. படத்தின் நாயகனான சாமோ, சங் என்ற பெயரில் இண்டர்போல் ஏஜெண்டாக நடித்துள்ளார். இண்டர்போல் ஏஜெண்டான சங், மிகப்பெரிய போதை பொருள் கடத்தும் கும்பலை ஒட்டுமொத்தமாக அழித்து விட்டு, அங்கிருந்து அமெரிக்கா செல்கிறார்.
ஆனால், போதை மருந்து கடத்தும் கும்பலின் தலைவனாக செயல்பட்டவனின் தம்பி பவர், சங்கை பழிவாங்க துடிக்கிறான். மிகுந்த ஆத்திரத்துடன் சங்கின் குடும்பத்தை கூண்டோடு அழிக்க அவன் திட்டமிடுகிறான். சங்கின் குடும்பத்தை அழிக்க மேடம் ரோசை அவன் அமெரிக்காவுக்கு அனுப்புகிறான். இவர்களின் தாக்குதலில் இருந்து சங்கும், அவரது ஐந்து வயது மகளான வெங் சிங்கும் தப்பித்துவிடுகின்றனர்.
ஆனால் எதிர்பாராதவிதமாக மேடம் ரோஸ், வெங் சிங்கை கடத்திச் சென்றுவிடுகிறாள். அவளை மூளை சலவை செய்யும் ரோஸ் அவளை இரக்கமற்ற கொலைகாரியாக மாற்றுகிறாள்.
இந்த கட்டத்தில் 1995 ஆம் ஆண்டுக்கு படம் நகருகிறது. பீனிக்சாக மாறிய வெங் சிங், தான் யார் என்பது தெரியாமலேயே கல்லூரி மாணவி என்ற போர்வையில் போதை மருந்து கடத்துகிறாள். ஒரு கட்டத்தில் பீனிக்ஸை மேடம் ரோஸ் லங்கை கொல்ல அனுப்புகிறாள். பீனிக்ஸ் லங்கை கொலை செய்தாளா? அல்லது லங் தான் தனது தந்தை என்பதை பீனிக்ஸ் தெரிந்துகொண்டாளா? என்பதே மீதி கதை.
முந்தைய படங்களைபோல் இப்படத்தில் ஆடையில்லாமல் யாரும் வரவில்லை. எனினும் ஆடையை குறைத்து கவர்ச்சியாக பலர் நடித்துள்ளது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
ஆக்சன் காட்சிகளில் சண்டை பயிற்சியாளர் கோரே யுவென் தனது தனித்திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். 1990 ஆம் ஆண்டில் ஹாங்காங் வாசிகள் எந்த மாதிரியான உடையை உடுத்தியிருப்பார்களோ, அதே மாதிரி உடையை படத்தில் நடித்தவர்களை தத்ரூபமாக அணியவைத்து காஸ்டியூமில் கலக்கிய படக்குழுவின் ஈடுபாடு பாராட்டுதலுக்குரியது.
கடந்த கால நினைவுகளை ரசிப்பவர்களை கவரும் வண்ணம் படம் முழுவதும் வேடிக்கையாக காட்சியளித்து, அந்தகால நினைவுகளை அசை போடுகிறது. எனினும் சில கட்டங்களில் படம் கொஞ்சம் போரடிப்பதும் உண்மை.
மொத்தத்தில் அசத்தல் அழகிகள் பழங்கால அழகு