சென்னையில் கார் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார் நாயகன் விக்ரம் பிரபு. இவர் ஒருநாள் பார்ட்டியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த பார்ட்டியில் கலந்துகொள்ள வரும் நாயகி பிரியா ஆனந்தை கண்டவுடன் காதல் வயப்பட்டு விடுகிறார். அவரிடம் எப்படியாவது போன் நம்பரை வாங்கிவிட வேண்டும் என்று முயற்சி செய்யும் விக்ரம் பிரபு, அவளிடம் நைசாக பேச்சு கொடுத்து போன் நம்பரை வாங்கிவிடுகிறார்.
மறுநாள் அவளிடம் எப்படி பேசுவது என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், இவருடைய நம்பருக்கு நாயகியே எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறார். பதிலுக்கு இன்று இரவு விருந்தில் இருவரும் நேரில் சந்திப்போம் என பதில் எஸ்.எம்.எஸ்., அனுப்புகிறார். பிரியா ஆனந்தும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருவரும் அன்று இரவு ஒரு ஹோட்டலில் சந்திக்கிறார்கள்.
அங்கு இருவரும் மது அருந்துகிறார்கள். ஹோட்டலை மூடும் நேரம் வருகையில், இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வருகிறார்கள். எங்கு செல்லலாம் என யோசித்துக் கொண்டிருக்கையில், பிரியா ஆனந்த், விக்ரம் பிரபுவை தன்னுடைய வீட்டுக்கு வருமாறு அழைக்கிறார். விக்ரம் பிரபுவும் அவளது அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் அவளுடனேயே செல்கிறார்.
ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் பிரியா ஆனந்தின் வீட்டிற்கு செல்லும் இவர்கள், அங்கேயும் மது அருந்துகிறார்கள். இடையில் விக்ரம் பிரபு பாத்ரூம் போய்விட்டு திரும்பும்போது, இரண்டு பேர் அந்த வீட்டுக்குள் புகுந்து அவளை கடத்த முயற்சி செய்கிறார்கள். அவளை காப்பாற்ற முயற்சிக்கும் விக்ரம் பிரபுவை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அவளை கடத்தி சென்று விடுகிறார்கள்.
உடனே, அருகிலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இதுகுறித்து புகார் கொடுக்கிறார். இவரது புகாரை ஏற்றுக்கொள்ளும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்கிறார் விக்ரம் பிரபு. அங்கு பிரியா ஆனந்த கடத்தப்பட்டதாக விக்ரம் பிரபு கூறும் எந்த அடையாளமும் இல்லை. வாட்ச் மேனும் பிரியா ஆனந்த் வெளியூருக்கு சென்றிருப்பதாகவும், அவள் கடத்தப்படவில்லை என்றும் மர்ம முடிச்சு போடுகிறார். அங்கிருக்கும் சிசிடிவி கேமராவிலும் பிரியா ஆனந்த் கடத்தப்பட்டதற்கான எந்த வீடியோவும் பதிவாகவில்லை. இதனால், இருவரும் குழம்பி போகின்றனர்.
இறுதியில், பிரியா ஆனந்த் கடத்தப்பட்டாளா? அவளை கடத்தியது யார்? அவளை எதற்காக கடத்தினார்கள்? அவளை விக்ரம் பிரபு கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை சஸ்பென்ஸுடன் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
விக்ரம் பிரபு மாடர்ன் இளைஞனாக கவர்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளில்தான் கொஞ்சம் தடுமாறுகிறார். இருந்தாலும், இவருடைய வெற்றிப் படங்களின் வரிசையில் இதுவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. நாயகி பிரியா ஆனந்த், படம் முழுக்க கவர்ச்சியை விதைத்திருக்கிறார். படம் முழுவதும் வந்துபோனாலும் நடிப்பதற்கென்று பெரிதாக காட்சிகள் ஒன்றும் இல்லாதது வருத்தமே.
மத்திய அமைச்சராக வரும் ஜே.டி.சக்கரவர்த்தி வில்லனாக மிரட்டியிருக்கிறார். இவரது அடியாட்களாக வருபவர்களும் பொருத்தமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சிறிது நேரமே வந்தாலும், அவருடைய நேர்மையான குணமும், நடிப்பும் மனதில் தங்கும்படி இருக்கிறது. போலீஸ் கமிஷனராக வரும் ஜேப்பி, லேகா வாஷிங்டன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படம் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர். முதல்பாதி முடிந்தபிறகு இரண்டாம் பாதி எப்போது ஆரம்பிக்கும் என்ற ஆவலை தூண்டியிருக்கிறார். பிற்பாதியின் நீளத்தை குறைத்திருந்தால் கொஞ்சம் சலிப்பு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம். பரபரப்பான காட்சிகளை தெளிவாகவும், துல்லியமாகவும் படம் பிடித்திருக்கிறது ஆர்.டி.ராஜசேகரின் கேமரா. நீர்வீழ்ச்சியில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. அறிமுக இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி இசையில் பாடல்கள் பரவாயில்லை. சண்டை, திரில்லர் காட்சிகளில் இவருடைய பின்னணி இசை மிரட்டுகிறது.
மொத்தத்தில் ‘அரிமா நம்பி’ ரசனை.