படித்து விட்டு வேலைதேடி வருகிறார் நாயகன் விஷால். எல்லா தகுதியும் உள்ள இவருக்கு வேலை கிடைத்தாலும், ‘நார்கொலாப்சி’ என்ற வினோதமான தூக்க நோயால் பாதிக்கப்பட்ட அவரால் எந்த இடத்திலும் நிலைக்க முடியவில்லை. அதிர்ச்சியான தகவலைக் கேட்டாலோ, அதிக சத்தம் கேட்டாலோ அல்லது டென்ஷன் ஆனாலோ... அது எந்த இடமாக இருந்தாலும் சரி பொசுக்கென தூங்கி விழுந்துவிடுவார். அப்படி தூங்கினாலும் அக்கம் பக்கத்தில் நடப்பது, அவர்கள் பேசுவது அனைத்தும் கேட்கும்.
இத்தகைய மோசமான தூங்கி வழியும் நோயால் பாதிக்கப்பட்டு, நிரந்தர வேலையும் இல்லாததால் விரக்தியடைந்த விஷால், சொந்தமாக ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தே வேலை முடிவு செய்கிறார். அதேசமயம், அவர் எந்த நேரத்தில் தூங்குவார், எந்த நேரத்தில் விழிப்பார் என்று உறுதியாக கூற முடியாததால், எங்கு சென்றாலும் நண்பர்களான ஜெகன், சுந்தர் ராமு ஆகியோரை துணைக்கு அழைத்துச் செல்கிறார்.
ஒருநாள் தனியாக செல்ல ஆசைப்பட்ட விஷால், சாலையில் நடந்து போகும்போது திடீரென கேட்ட சத்தம் காரணமாக நடுரோட்டில் தூங்கி விழுகிறார். அப்போது, குடிபோதையில் வந்த மயில்சாமியோ, இவரை பிணம் என்று கூறி பணம் வசூலிக்கிறார். அப்போது அங்கு வரும் லட்சுமி மேனன், பரிதாபப்பட்டு உதவி செய்வதாக கூறி பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடுகிறார்.
மறுநாள் ஷாப்பிங் மாலில் விஷாலைப் பார்த்த லட்சுமி மேனன் அதிர்ச்சியடைகிறார். நடந்த சம்பவத்தை விஷாலிடம் கேட்டு தெரிந்துகொள்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். விஷாலுக்கு அரிய வகை நோய் இருப்பதை அறிந்தே, அவர் மீது லட்சுமி மேனன் காதல் கொள்கிறார். முதலில் ஏற்க மறுத்த விஷால் பின்னர் காதலை ஏற்கிறார்.
விஷாலின் தாய் சரண்யாவுக்கோ, தன் மகனுக்கு பெண் கிடைத்த பூரிப்பு. ஆனால், லட்சுமி மேனனின் தந்தை ஜெயப்பிரகாஷ், தூங்கி விழும் விஷால் தாம்பத்ய வாழ்க்கைக்கு லாயக்கில்லை என்று கூறி காதலை வெட்டி விடப் பார்க்கிறார். இந்த லாஜிக்கை உடைக்க முடிவெடுத்த லட்சுமி மேனன், திருமணத்திற்கு முன்பே விஷாலுடன் நெருக்கமாக பழகி, அதன் காரணமாக கர்ப்பமாகிறார்.
பின்னர் இருவரும் காரில் சென்றபோதுதான் அந்த பயங்கரம் ஏற்படுகிறது. காரை வழிமறித்த ஒரு கும்பல் லட்சுமி மேனனை பலாத்காரம் செய்கிறது. அதிர்ச்சியில் தூங்கி விழுந்த விஷால், காதலியை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார். லட்சுமி மேனனோ அதிர்ச்சியில் கோமா நிலைக்கு செல்கிறார்.
வாழ்க்கையில் கொடிய இன்னல்களை சந்தித்த விஷால், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நபர்களை பழிவாங்க முடிவு செய்கிறார். அவர்களை அடையாளம் கண்டுபிடித்து பழிவாங்கினாரா? லட்சுமி மேனனுடன் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தாரா? என்பதே மீதி கதை.
கதாநாயகன் விஷால் வழக்கமான அதிரடி நடிப்பில் இருந்து சற்று விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். தூங்கி விழும் கதாபாத்திரத்தை யதார்த்தமாக செய்துள்ள விஷால், ரசிகர்களிடம் சபாஷ் பெறுகிறார். பிரகாஷ்ராஜை திட்டும்போது அனுதாபத்தை வரவழைத்திருக்கிறார். இனி இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்களை அவரிடம் எதிர்பார்க்கலாம்.
இடைவேளை வரை மட்டுமே லட்சுமிமேனனுக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டாலும், படத்தின் விறுவிறுப்பை அதிகரிப்பதற்க தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். முந்தைய படங்களைவிட அவரது அழகு கூடியிருக்கிறது. அவருக்கான காஸ்ட்யூம் கலக்கல்.
இனியா இடைவேளைக்குப்பிறகு வந்தாலும் கொடுத்த கதாபாத்திரத்தை ஓரளவு செய்திருக்கிறார். அப்பாவி அம்மாவாக வரும் சரண்யா மற்றும் ஜெயப்பிரகாஷ் இருவரும் வழக்கம்போல் தங்கள் திறம்பட செய்திருக்கிறார்கள். இருவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்கிறது.
நண்பர்கள் ஜெகன், சுந்தர் ராம் ஆகியோரும் கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக உள்ளனர். குறிப்பாக, கதையின் திருப்பு முனையாக சுந்தர் ராம் கதாபாத்திரம் அமைந்துள்ளது. ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்முன் நிற்கின்றன. ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
ஹீரோயினுக்காக வில்லன்களை பழிவாங்கும் கதையை இந்த படத்திலும் கைணாடிருக்கிறார் இயக்குனர் திரு. அவரது முந்தைய படத்தின் சாயல் ஒட்டிக்கொண்டிருக்கிறது.
வித்தியாசமான கதைக்கருவை கையாண்டிருப்பதை பாராட்டலாம். ஆனால், இடைவேளையின்போதே படத்தை தொய்வடைய செய்திருக்கிறார். இரண்டாவது பாதியில் போரடிப்பதை தவிர்க்க, இனியாவை வைத்து கதையை நகர்த்தி கொணடு சென்றிருகிறார். அதில் சில தேவையில்லாத காட்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன.
மொத்தத்தில் நான் சிகப்பு மனிதன் ‘மாறுபட்ட மனிதன்’