நாமக்கல்லில் தாய், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் வேலன். இவர் ஊரில் உள்ள மக்களுக்கு நல்லது செய்து கொண்டு இருக்கிறார். அதே ஊரில் பண்ணையாரின் மகன், நாடகக் கலைஞர்களை வைத்து ஒரு நடனக் குழு ஒன்றை நடத்தி வருகிறார். இக்குழு மூலம் மகனுக்கு தெரியாமல் பண்ணையார் இளைஞர்களை தீய வழிக்கு அழைத்துச் செல்கிறார்.
ஊரில் திருவிழா ஒன்று நடக்கிறது. அதில் சிலம்பாட்டத்தில் பண்ணையாரின் ஆளை, வேலன் அடித்து போட்டியில் ஜெயித்து விடுகிறார். இதனால் பண்ணையாரின் கோபத்துக்கு அவர் ஆளாகிறார். அதன் பிறகு இரவு நடக்கும் பண்ணையாரின் மகன் நடத்தும் நடன நிகழ்ச்சியில், ஆபாசமாக ஆடியதாக போலீசில் புகார் கூறி பண்ணையாரின் மகனை கைது செய்து விடுகிறார்கள். இவரை கைது செய்ததால் நடனக் கலைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக ஒரு கலைஞர் இறக்க நேரிடுகிறது. இவரை காப்பாற்றுகிறார் வேலன்.
நடனக் கலைஞர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில், அக்கலைஞர்களை வரவழைத்து அவர்களுக்காக ஒரு நடனக்குழு ஒன்றை வேலன் ஆரம்பிக்கிறார். இந்த விசயம் பண்ணையாருக்கும் ஜெயில் இருந்து வெளி வரும் அவருடைய மகனுக்கும் தெரிய வருகிறது. இதனால் வேலனை தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்கள்.
இறுதியில் வேலனை பண்ணையார், பழி வாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
வேலனாக நடித்திருக்கும் நாமக்கல் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர் போல் தோற்றம் உள்ளதால் நடிப்பு, நடை, நடனம், சண்டை என அனைத்திலும் அவரைப் போலவே செய்கிறார். ஆனால் ரசிக்கத்தான் முடியவில்லை. எம்.ஜி.ஆர். என்று நினைத்துக் கொண்டு இவர் செய்யும் வேலைகள் கொஞ்சம் அதிகமாக தான் தெரிகிறது.
படத்தில் நாயகிக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. பாடலுக்கு மட்டுமே வந்து செல்கிறார். அதிலும் கொடுத்த வாய்ப்பை பயன்படுத்த வில்லை. ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் பலவீனம். தத்துவப் பாடல்கள் என நிறைய பாடல்கள் வந்தாலும் ஓரிரு பாடல்களை ரசிக்கலாம்.
மொத்தத்தில் ‘இதயத்தில் ஒருவன்’ போலியானவன்.