அசுரர்களின் பயிற்சி பட்டறையில் இருந்து சிறுவயதில் கய் தப்பித்து காட்டுக்கு வந்து விடுகிறான். அங்கு மயக்க நிலையில் கிடந்த கய்யை அந்த வழியாக வரும் லார்டு அசானோ காப்பாற்றுகிறார். காப்பாற்றிய அவரை தனது நாட்டிற்கு அழைத்து சென்று அங்கேயே தங்க வைக்கிறார். சிறு வயதில் இருந்தே கய்க்கும் லார்டு அசானோவின் மகள் மிகாவிற்கும் நட்பு ஏற்படுகிறது. நாளடைவில் இவர்களுடைய நட்பு வளர்ந்தபின் காதலாக மாறுகிறது.
இவர்கள் வாழும் நாட்டில் போரில் ஈடுபடுபவர்கள் சாமுராயாக இருக்க வேண்டும். இந்நிலையில் அங்கு சாகச விளையாட்டு ஒன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் லார்டு கிரா, லார்டு அசானோ ஆட்சி செய்யும் நாட்டை அடைய வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறான். அங்கு நடக்கும் போட்டியில் அசானோ ஆதரவு வீரரும், கிரா ஆதரவு வீரரும் சண்டையிட வேண்டும். ஆனால், சண்டைக்கு முன்பே மாந்திரீக வேலை செய்யும் மிசுகி உதவியால் அசானோ ஆதரவு வீரரை மயக்கம் அடைய செய்து விடுகிறார் கிரா. இதனை கய் பார்த்து விடுகிறார்.
இந்த சண்டை நடைபெறாமல் போனால் அசானோ நாட்டிற்கு பெரும் அவமானம் நேரிடும். இதனால் அசானோ ஆதரவு வீரர் சண்டையில் ஈடுபடமுடியாமல் இருக்கும் நிலையில், அவருடைய உடையை கய் அணிந்து கொண்டு சண்டை போட களத்தில் இறங்குகிறார். இந்தப்போட்டியை பார்வையிட ஜப்பான் நாட்டின் மிகவும் மரியாதைக்கு உரிய ஆளான ஷோகன் கலந்து கொள்கிறார்.
சண்டை போட்டி நடந்து கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் கய்யின் முக கவசம் கழண்டு விடுகிறது. இதைப்பார்த்த ஷோகன் கய்யை கொள்வதற்கு கட்டளையிடுகிறார். அப்போது கய்யை காப்பாற்ற மிகா முயற்சி செய்கிறார். இதைக்கண்டு ஷோகன் அதிர்ச்சி அடைகிறார். தன் மகளின் செயலால் மிகாவின் தந்தையான அசானோ, ஷோகனிடம் மன்னிப்பு கேட்கிறார். இதற்கு பதில் அளிக்காமல் ஷோகன் கோபமாக எழுந்து சென்று விடுகிறார்.
இதனால் பெரும் அவமானம் ஏற்பட்ட அசானோ, தன் அறைக்குச் சென்று விடுகிறார். இந்நிலையில் மாந்திரீககாரியான மிசுகி தன் திறமை மூலம் அசானோவை தன் வசப்படுத்தி கிராவை கொல்ல அனுப்புகிறார். தூங்கிக் கொண்டிருக்கும் கிராவை அசானோ தாக்குகிறார். கிராவின் அலறல் சத்தம் கேட்டு ஷோகன் மற்றும் போர் வீரர்கள் அங்கு விரைகிறார்கள். கத்தியில் ரத்தக்கறையுடன் இருக்கும் அசானோவை பார்க்கும் இவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அந்நாட்டின் வழக்கப்படி மரண தண்டனை அளிக்கப்படும். எனவே ஷோகன், அசானோவிற்கு மரண தண்டனை விதிக்கிறார். அரசரான அசானோ இறந்து விட்டதால் அவருக்கு பின் அவருடைய வாரிசான மிகா ஆட்சி பொறுப்பை ஏற்க முற்படுகிறார். அப்போது ஷோகன் ‘நீ ஆட்சி பொறுப்பை ஏற்கமுடியாது. அப்படி ஏற்க வேண்டுமானால் கிராவை திருமணம் செய்து கொள்ளவேண்டும். இதற்கு ஒரு வருடம் கால அவகாசம் தருகிறேன். அதுவரை நீயும் உன் நாடும் கிரா கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்’ என்று கூறுகிறார்.
கிரா கட்டுப்பாட்டு வரும் அந்நாடு அசானோ ஆட்சி செய்யும் போது அவருக்கு விசுவாசமாக இருந்த போர் வீரர்களை அந்நாட்டை விட்டு வெளியேற ஆணையிடுகிறார். போர் வீரர்களின் தலைவரான ஓய்சியை ஒரு வருடம் பாதாள அறையில் அடைத்து விடுகிறார். கய்யை அடிமையாக காபிடான் என்பவருக்கு விற்றுவிடுகிறார்.
ஒரு வருடத்திற்குப்பிறகு பாதாள அறையில் இருந்து வெளியே வரும் போர் வீரர்களின் தலைவன் ஓய்சி, தன் நாட்டுக்கு ஏற்பட்ட அநீதியை அடக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக அசுரர்களால் பயிற்சி தரப்பட்ட கய்யை தேடி அழைகிறார். காபிடான் கட்டுப்பாட்டில் இருக்கும் கய்யை அழைத்து வருகிறார். இவர்கள் இருவரும் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட அசானோவின் விசுவாச வீரர்களை ஒன்று சேர்க்கிறார்கள்.
ஒன்று சேர்ந்த 47 வீரர்கள், கிராவிடம் இருந்து நாட்டை காப்பாற்றினார்களா? மிகாவின் திருமணத்தை நிறுத்தினார்களா? மாந்திரீக சக்தி படைத்த மிசுகியிடம் இருந்து தப்பித்தார்களா? என்பது மீதிக்கதை.
கய்யாக நடித்திருக்கும் கியானோ ரிவ்ஸ் தனது முந்தைய படங்களில் இருந்த முக்கியத்துவம் இப்படத்தில் குறைவு. போர் வீரர்களின் தலைவனான ஓய்சியாக நடித்த ஹிரோயுகி சனாடாவின் நடிப்பு மிக நன்று. மிகாவாக நடித்த கோ சிபாஸ்கி கதாபாத்திரத்திற்கு தகுந்தவார் நடித்துள்ளார். மிசுகியாக நடித்திருக்கும் ரின்கோ கிகுச்சிவின் நடிப்பு ரசிக்கதக்கவை.
படத்தின் டிரைலரில் இருந்த விறுவிறுப்பு படத்தை பார்க்கும் போது எதுவுமே இல்லை. ஜான் மேத்திசனின் ஒளிப்பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது. இயக்குனர் கார்ல் ரிஞ்ச் படத்தை விறுவிறுப்புடன் எடுத்திருக்கலாம். எதிர்ப்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
மொத்தத்தில் ‘47 சாகச வீரர்கள்’ வெறும் வீரர்கள்.