பக்ரூவின் தந்தை மிகப்பெரிய செல்வந்தர். அவர் ஒருநாள் வழியில் அனாதையாக திரியும் ஆதித்யாவை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அங்கு வரும் ஆதித்யாவும், பக்ரூவும் நெருங்கிய நண்பர்களாகின்றனர். வளர்ந்து பெரியவர்களானதும் அதே நட்புடன் வாழ்ந்து வருகிறார்கள். பக்ரு தான் வளர்ச்சி குறைந்தவன் என்பதால் அனைவரும் கேலி செய்வர் என்பதற்காக அந்த ஊரில் ரொம்பவும் கண்டிப்பான ஆளாக வலம் வருகிறார். இவருக்கு பக்க துணையாக ஆதித்யா, முன்னா ஆகியோர் இருக்கின்றனர்.
அப்போது அந்த ஊருக்கு பக்ரூவின் மாமன் மகளான சனுஷா வருகிறார். சிறுவயதிலேயே இவளுக்கும் பக்ரூவுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது பெரியவர்கள் எடுத்த முடிவு. ஆனால், சனுஷாவின் அப்பாவுக்கோ இதில் துளியும் விருப்பமில்லை. ஊரில் வந்து இவர்கள் இறங்கியவுடனே பக்ரூ போலீசிடம் கைதாகி செல்வதைப் பார்த்ததும் அவர் மீது மேலும் வெறுப்படைகிறார் சனுஷாவின் அப்பா. இதற்கிடையில் சனுஷாவை எப்படியாவது பக்ரூவுக்கு கட்டி வைத்துவிட வேண்டும் என பக்ரூவின் அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
இந்நிலையில், சனுஷாவின் அப்பாவை கடன்காரர்கள் மிரட்டுகிறார்கள். அப்போது, அதே ஊரில் கல்குவாரி வைத்திருக்கும் சைஷுவின் அப்பா யோசனை கூறுகிறார். அதாவது, சிறுவயதில் பக்ரூவுக்கு நீங்கள் எழுதிக்கொடுத்த கல்குவாரி நிலத்தை திரும்ப வாங்கிக்கொண்டால் உங்கள் கடன் பிரச்சினை தீரும் என்றும், சனுஷாவை பக்ரூவுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார். ஆனால், சனுஷா அப்பாவோ அதனை ஏற்க மறுக்கிறார்.
இதற்கிடையே சனுஷாவை தனிமையில் சந்தித்து தனது காதலை சொல்ல விரும்பும் பக்ரூவின் முயற்சிகள் தோல்வியடையவே, ஆதித்யாவை தூது அனுப்புகிறார். ஆதித்யா சனுஷாவிடம் சொல்லமுடியாமல் அவளது தோழியிடம் சொல்கிறார். அவளோ, சனுஷாவுக்கு கல்குவாரி நிலத்தை எழுதிக்கொடுத்தால் அவரது அப்பாவை சம்மதிக்க வைத்துவிடலாம் என யோசனை கூறுகிறார். இதை, பக்ரூவிடம் சொல்கிறார் ஆதித்யா. சனுஷாவை எப்படியாவது திருமணம் செய்யவேண்டும் என்ற ஆவலில் பக்ரூ அந்த நிலத்தை எழுதிக் கொடுக்க முடிவெடுக்கிறார்.
நிலப் பத்திரத்தை சனுஷாவின் தோழியிடம் ஒப்படைக்கும் ஆதித்யா, நிம்மதிப் பெருமூச்சு விடும் வேளையில் அவளது தோழி மேலும் ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார். அதாவது, சனுஷா பக்ரூவை விரும்பவில்லை, மாறாக ஆதித்யாவைத்தான் விரும்புகிறாள் என கூறுகிறாள். இதனால் மனமுடைந்து போகிறார் ஆதித்யா.
இறுதியில் பக்ரூ, சனுஷாவை கரம்பிடித்தாரா? இல்லை ஆதித்யாவை சனுஷா கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
பக்ரூ வேஷ்டி, சட்டை, வாயில் வெற்றிலை பாக்கு என மிடுக்கான தோற்றத்தில் படம் முழுவதும் வலம் வருகிறார். இவருக்கும் தவக்களை சாமிக்கும் நடக்கும் சண்டையில் மிளிர்கிறார். சனுஷா மாடர்ன் உடையிலும், பாவடை தாவணியிலும் அசத்துகிறார். அவ்வப்போது சிரித்து சிரித்து மயக்குகிறார்.
தோழியாக வரும் லயாவும் அழகாக இருக்கிறார். இன்னொரு நாயகனாக வரும் ஆதித்யா சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். நண்பனின் காதலி தன்னை காதலிக்கிறாள் என்பதை அறிந்ததும் நடிப்பில் காட்டவேண்டிய உணர்வை காட்ட திணறியிருக்கிறார்.
இயக்குனர் பக்ரூ இந்த படத்தை இயக்கியதன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். நாயகி பக்ரூவை காதலிக்கவில்லை, அவரது தோழனை காதலிக்கிறாள் என்று நாயகியின் தோழிதான் சொல்கிறாள். ஆனால், நாயகியோ யாரைக் காதலிக்கிறாள் என்பதை சரியாக சொல்லவில்லை. கடைசி வரை நாயகி யாரைக் காதலிக்கிறாள் என்பதை சொல்லாமலேயே முடித்துவிட்டார். பக்ரூ வரும் காட்சிகளை பிரம்மாண்டாக காட்டியிருக்கிறார். பிளாஸ்பேக் காட்சிகள் ரொம்பவும் நீளமாக வைத்தது போரடிக்க வைத்திருக்கிறது.
விநோத் பாரதியின் ஒளிப்பதிவு, காட்சிகளை பிரம்மாண்டமாக காட்ட உதவியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் குளுமையை காட்டியிருக்கிறது. ஷான் ரஹ்மான் இசையில் பின்னணி இசை இரைச்சலாக இருக்கிறது. பாடல்களும் பரவாயில்லை.
மொத்தத்தில் ‘சக்தி விநாயகம்’ பலவீனம்.