உறவுகள் யாரும் இல்லாத டோனிஜா ஒரு கிராமத்தில் யானையுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கும்பல் அந்த யானையை விலைக்கு கேட்கிறார்கள். அதை கொடுக்க டோனிஜா மறுத்து விடுகிறார். இதனால் அந்த கும்பல் அந்த யானையை கடத்தி விடுகிறார்கள். அவர்களை தேடி டோனிஜா அலைகிறார்.
அந்த கும்பல் யானையை பணய கைதியாக வைத்துக்கொண்டு, ‘நீயும் யானையும் உயிருடன் செல்ல வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் ஒருவரை கொலை செய்ய வேண்டும்' என்று கட்டளையிடுகிறார்கள். இதனால் டோனிஜா தன் யானையின் மீது உள்ள பாசத்தால் யானையை உயிருடன் மீட்க அவர்கள் சொல்லும் கட்டளைக்கு கீழ் படிகிறார்.
இறுதியில் அந்த கொலையை செய்தாரா? அல்லது யானையை மீட்டாரா? என்பது மீதிக்கதை.
நாயகன் டோனிஜா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார். படத்தில் 20 நிமிடங்கள் இடம்பெற்ற பைக் சேசிங் காட்சி மட்டும் ரசிக்கும் படியாக அமையவில்லை. டோனிஜா எதிரிகளை எவ்வளவு அடித்தாலும் அவர்கள் களைப்படையாமல் மீண்டும் மீண்டும் வந்து தாக்குகிறார்கள். ஆனால் படத்தை பார்ப்பவர்கள் களைப்படைந்துவிடுகிறார்கள். இதை இயக்குனர் சரி செய்திருக்கலாம்.
மொத்தத்தில் ‘கும்கி வீரன்’ ஊசிப் பட்டாசு.