ஒரு வீட்டுக்குள் நடக்கக்கூடிய திகில் கதையே அகடம். கேமராவுக்கு கட் கொடுக்காமலே இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக எடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற படம். எட்டு கதாபாத்திரங்களை ஒரு வீட்டுக்குள் வைத்து அந்த கதாபாத்திரங்களை சுற்றி இந்த கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.
நண்பர்களான அசோக், சஞ்சய் ஆகிய இருவரும் பிணக்கிடங்கில் இருந்து ஒரு பெண் பிணத்தை தமிழ் என்றவரின் துணையோடு தூக்கி வந்து ஒரு வீட்டுக்குள் புதைக்கிறார்கள். அப்போது தனது முதலாளி அனுப்பிய ஆள் என்று ஜான் அங்கு வருகிறார். அவரிடம் நண்பர்கள் இருவரும் போலி மருந்து விற்பனைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் நண்பர்களிடம் ஜான் பார்ட்டி கேட்க, ஒரு பெண்ணை கூட்டி வருகிறேன் என்று சொல்லி சஞ்சய் வெளியே கிளம்புகிறார். இந்நிலையில், முதலாளியிடமிருந்து போன் ஒன்று வருகிறது. அப்போது அவர் பேசுகையில், மார்ச்சுவரியில் இருந்து பிணத்தை கொண்டுவர உதவி செய்த தமிழை தீர்த்துக்கட்டும்படி ஜானுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.
இதையடுத்து ஜானும், அசோக்கும் சேர்ந்து உதவி செய்த இளைஞரை பேய் போல் பயமுறுத்தி கொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், இவர்களால் அந்த வீட்டுக்குள் புதைக்கப்பட்ட பெண்ணின் ஆவி இவர்களை பழிதீர்க்க பார்க்கிறது. இறுதியில், அந்த ஆவி இவர்களை பழிவாங்கியதா? அல்லது உதவி செய்த இளைஞரை அவர்கள் கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.
இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட படம். ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை என்பதால் விறுவிறுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக திரில்லிங் கதையாக தேர்வு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர். இதனால் ஒரே கதாபாத்திரம் நீண்ட வசனங்களை பேசி, பார்க்க சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தமிழ் சினிமாவுக்கு ஒரு புது முயற்சி என்றாலும், திரையில் பார்ப்பதற்கு பளிச்சிடவில்லை.
படத்தில் நடித்திருக்கும் அனைவரின் நடிப்பும் சுமாரானதே. இருந்தாலும் புதுமுயற்சிக்கு தோள் கொடுத்ததற்காக பாராட்டலாம். பேயாக வரும் ஸ்ரீபிரியங்காவின் கண்கள் கொஞ்சம் பயமுறுத்துகின்றன. திரில்லர் கதைக்கு இசை ரொம்பவும் முக்கியம். இந்த படத்தில் இசையும் கொஞ்சம் பலவீனமாகவே உள்ளது. தொடர்ச்சியாக ஒளிப்பதிவு செய்து அசத்திய நௌசத் கானுக்கு பாராட்டு தெரிவிக்கலாம்.
மொத்தத்தில் ‘அகடம்’ அசௌகரியம்.