1935-ல் தொடங்கி 1947 வரையிலான நடக்கும் கதைதான் ‘நம்ம கிராமம்’. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் அன்றைய இந்திய கிராமங்களில் நடைபெற்ற ஜாதீய கொடுமையின் அடக்குமுறையையும், பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இப்படம்.
கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் வாழும் பிராமண குடும்பத்தைச் சுற்றி இந்த கதை நகர்கிறது. அக்குடும்பத்தில் பெரியவரான மோகன் சர்மா தனது மனைவி, தங்கை, தங்கையின் கணவர் மற்றும் அவரது அம்மா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறான். தங்கைக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு பால்ய வயதிலேயே திருமணம் முடித்து வைக்கிறார் மோகன் சர்மா.
அந்தக்கால வழக்கப்படி சிறு வயதில் திருமணம் முடித்தாலும் மணமான பெண் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவதில்லை. அவள் பருவம் அடைந்த பிறகே மணமகன் வீட்டிற்கு அனுப்பப்படுகிறாள். அந்த வகையில் திருமணம் முடிந்த பின்பும் தனது தங்கையின் மகள் அவருடைய வீட்டிலேயே இருக்கிறாள்.
மணமுடிந்து வீட்டுக்கு செல்லும் வழியில் மணமகன் பாம்பு கடித்து இறந்து போகிறான். இதனால் சிறு வயதிலேயே இவள் விதவையாகிறாள். இதன்பிறகு, அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமைகளையும், அவளின் ஏக்கத்தையும் தெள்ளத் தெளிவாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன் சர்மா.
விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு திடீரென சிறுவனுடன் திருமணம் செய்து கொடுத்து, அன்றே அவளது கணவன் மரணத்தின் பிடியில் சிக்கி இறந்துபோனபின், அவள் விதவைக் கோலமாக மூலையில் உட்காரும் அன்றைய கால அவல நிலையை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் மோகன்சர்மா. இதை எதையுமே புரிந்துகொள்ள முடியாத சிறுமியின் நிலையை திரையில் பார்க்கும்போது பார்வையாளர்கள் கண்கலங்குவது நிச்சயம்.
விதவையான சிறுமி வீட்டில் இருக்கும்போது, மோகன் சர்மா தன்னுடைய ஆசையை தணித்துக்கொள்ள வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறார். இதன்மூலம் ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.
நகைச்சுவைக்கென தனியொரு பாதை அமைக்காமல் படத்தில் நடக்கும் காட்சிகளையே யதார்த்தமான காமெடியாக உருவாக்கி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். குறிப்பாக, மனநிலை சரியில்லாத பாட்டி பேசும் இரட்டை அர்த்த வசனங்கள் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்காமல் மாறாக, சிரிப்பலையையே ஏற்படுத்தியிருக்கிறது.
ஒய்.ஜி.மகேந்திரன் பர்மா மாமா என்ற நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகள் ரொம்பவே கலகலப்பாக இருக்கின்றன. விதவைப் பாட்டியாக வரும் சுகுமாரி தனது அனுபவ நடிப்பால் முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக, சிறுமி விதவையான பிறகு அவளை இவர் அரவணைத்து அவள் மீது அன்பு காட்டும்போது, நடிப்பில் சிகரம் தொடுகிறார். சிறுமிக்காக தனது உடலையே தீயிட்டுக் கொள்வதில் உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவருக்கு தேசிய விருது கிடைத்திருப்பது இப்படத்திற்கு மேலும் ஒரு மணிமகுடம்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட கதை என்பதால், அந்த காலத்தில் அணிந்திருந்த உடைகளையும், அந்த கால கிராமத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களின் தேர்வும் அருமை.
மது அம்பாட் ஒளிப்பதிவு படத்துக்கு மேலும் ஒரு பலம். இரவிலும், பகலிலும் இவர் கேமரா காட்டும் வித்தியாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பி.என்.சுந்தரத்தின் இசை கதையின் ஓட்டத்தை பின்தொடர நன்றாக உதவியிருக்கிறது.
மொத்தத்தில் ‘நம்ம கிராமம்’ நல்ல கிராமம்.