நாமக்கல்-கொல்லிமலை வழித்தடத்தில் மினி பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கண்டக்டராக வேலை செய்பவர் குமரேசன். டிரைவர் ஒரு குடிகாரன். அடிக்கடி இவர் குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் முதலாளியிடம் இதை கூறி அவரை வேலையை விட்டு நிறுத்தி விடுகிறார் குமரேசன். அந்த டிரைவர் ஒரு நாள் இரவில் இவரை அடியாட்களுடன் வந்து தாக்குகிறார். அப்போது ஊரில் இருந்து அந்த வழியாக வரும் நாயகன் செல்வா, தன் நண்பன் குமரேசனை காப்பாற்றுகிறார்.
பின்னர் செல்வாவுக்கு வேலை இல்லாததால், தன் முதலாளியிடம் கூறி மினி பஸ்ஸுக்கு டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார். இந்த நண்பர்கள் ஒன்றாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மினிபஸ் முதலாளியின் மகள், குமரேசனை காதலிக்கிறார். இவரும் தன் முதலாளியின் மகள் என்று தெரியாமல் காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் கண்டக்டர் குமரேசனின் கலெக்சன் பையை முன்னாள் டிரைவர் திருடிச் செல்ல அதை துரத்திக் கொண்டு செல்வா செல்கிறார். அப்போது அந்த வழியில் வரும் மப்டியில் இருக்கும் கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து விடுகிறான். அவரை பார்த்த அதிர்ச்சியில் அவரிடம் இருந்து தப்பித்து தன்னுடைய ரூமுக்கு சென்று விடுகிறான் செல்வா. அவரை அந்த போலீஸ் அதிகாரி தேடி அலைகிறார்.
இந்த சூழ்நிலையில் நண்பன் குமரேசனின் காதல் விசயம் முதலாளிக்கு தெரியவர, அவரை அழைத்து பேச முதலாளி முடிவெடுக்கிறார். குமரேசன் துணைக்கு செல்வாவையும் அழைத்து செல்கிறார். அங்கு முதலாளியின் அண்ணன் செல்வாவைப் பார்த்து, பெங்களூரில் போலீஸ் ரெக்கார்ட் மற்றும் பத்திரிகைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டவன் எப்படி தமிழ்நாட்டில் உயிருடன் வாழ்கிறான்? என்று முதலாளியிடம் கூற அதிர்ந்து போகிறான்.
உடனே அவர் முதலாளி மூலம் குமரேசனை வைத்தே செல்வாவை கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். ஏன் கொல்லத் துடிக்கிறார்கள்? செல்வாவின் பெங்களூர் பின்னணி என்ன? இறுதியில் குமரேசன் தன் நண்பன் செல்வாவை கொலை செய்தானா? என்பது மீதிக்கதை.
நாயகனாக வரும் உதயா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். நண்பன் குமரேசனும் நடிக்க முயற்சித்திருக்கிறார். பின்பாதியில் வரும் நாயகி உதாஷாவுக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. கல்யாண புரோக்கர் என்னும் கதாபாத்திரத்தில் வரும் கஞ்சா கருப்பு காமெடி என்னும் பேரில் கடிக்கிறார்.
நிழல்கள் ரவி, ரஷியா, ரித்திகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், என்.ராஜா ஆகிய சிறுசிறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், படத்தின் ஓட்டத்திற்கு பொருந்தவில்லை.
இப்படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் பாலு ஆனந்த். நிறைய இடத்தில் லாஜிக் இல்லாமல் நடக்கிறது. தேவை இல்லாத காட்சிகள் படத்தில் நிறைய வருகின்றன. சம்பந்தம் இல்லாமலேயே பாடல் காட்சிகள் வருகின்றன. அதை இயக்குனர் குறைத்திருக்கலாம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குவதால் இத்தனை விசயத்தை மறந்துவிட்டார் போல, இயக்குனர் பாலு ஆனந்த்.
மொத்தத்தில் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' ரசிகர்களை யோசிக்க வைக்கிறது.