சிறுசிறு திருட்டு வேலைகளை செய்யும் நாயகன் வேலுவும், அவனுடைய நண்பன் பாலாவும் தங்கையின் காதுகுத்து வைபவத்துக்காக ஒரு திருட்டை செய்து, அதில் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு இருவரும் ரெயில் ஏறி சொந்த ஊருக்கு பயணமாகிறார்கள்.
அதே ரெயிலில், ‘என் காதலனைப் பார்க்கப் போகிறேன். என் மோதிரத்தைக் உங்களிடத்தில் கொண்டு வருபவன் என்னுடைய காதலன்... என்னை பெண் கேட்பதற்காக வருகிறான்’ என்று எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறும் நாயகி அனஸ்வராவும் பயணிக்கிறாள்.
ரெயிலில் பயணிக்கும்போது அனஸ்வராவின் மோதிரம் திடீரென காணாமல் போகிறது. தன்னுடன் அருகில் பயணிக்கும் வேலுதான் அந்த மோதிரத்தை திருடினான் என்று அவனிடம் சண்டைக்கு போகிறாள். வேலுவும், பாலாவும் நாங்கள் திருடவில்லை. மாறாக உன் மோதிரத்தை கண்டுபிடித்துத் தருகிறோம் என்று மோதிரத்தை தேடுகிறார்கள்.
இவர்களது நல்ல மனதை புரிந்துகொண்ட நாயகி தன்னுடைய முழுவிவரங்களையும் அவர்களிடம் சொல்லி விடுகிறாள். ஒரு ரெயில் நிறுத்தத்தில் வேலுவும், பாலாவும் ரெயிலை விட்டு கீழிறங்கி தண்ணீர் பாட்டில் வாங்கச் செல்கின்றனர்.
அப்போது அந்த மோதிரத்தை எடுத்தவனை கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவனைத் துரத்தி பிடித்து அவனிடமிருந்து மோதிரத்தை கைப்பற்றி திரும்பி வரும் அவர்கள் ரெயிலை விட்டு விடுகிறார்கள்.
கையில் நாயகியின் மோதிரத்துடன் நிற்கும் நண்பர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள். அப்போது திடீரென ஒரு யோசனை அவர்களுக்குள் தோன்றுகிறது. நாயகி தங்களிடம் சொன்ன அவளின் முகவரியில் சென்று மோதிரத்தைக் கொடுத்துவிட்டு தங்களுடைய பணப்பையை வாங்கி வரலாம் என முடிவு செய்து நாயகியின் வீட்டுக்கு செல்கின்றனர்.
நாயகியின் வீட்டுக்கு மோதிரத்துடன் செல்லும் வேலுவை, அவன்தான் தன்னுடைய மகளின் காதலன் என நினைத்துக் கொண்டு அவனை பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். அங்கிருந்து அவன் தப்பித்தானா? நாயகி தன் காதலனை கண்டுபிடித்தாளா? என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
நாயகன் வேலு புதுமுகம் என்றாலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். நண்பன் பாலாவுடன் இவர் அடிக்கும் லூட்டி அலப்பறை. இவரைவிட இவர் நண்பராக வரும் பாலாதான் படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார். ஹீரோவைவிட பாலாவே படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கிறார். இடைவெளி விடாமல் அவர் பேசிக் கொண்டே இருப்பதுதான் சலிப்பை ஏற்படுத்துகிறது.
நாயகி அனஸ்வராவும் புதுமுகம்தான். அழகாக இருக்கிறார். இவர் வசனத்தை இழுத்து இழுத்துப் பேசுவது இவர்மீது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. இன்னும் கொஞ்சம் பயிற்சி கொடுத்திருந்தால் ஜொலித்திருப்பார்.
‘கந்தக்கோட்டை’ படத்தை இயக்கிய சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஒட்டுமொத்த ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நினைப்பில் படத்தை எடுத்திருக்கிறார். ஆனால், இவரும், கேபிள் சங்கரும் எழுதிய வசனங்களைத்தான் படம் முழுக்க கேட்க முடிகிறதே தவிர எங்கேயும் சிரிப்பு வரவில்லை.
முதியவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் வசனங்கள் அமைத்தது அருவருக்கத்தக்கதாக உள்ளது. ஈஸ்வர்-கோமதி என்ற நாயகன்-நாயகி பெயர்களின் முதல் எழுத்தை தலைப்பாக வைத்து ‘ஈகோ’ என சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குனர். படத்தில் யார், யாருக்கு ஈகோ என்பதை எங்கேயும் சொல்லவில்லை. கவர்ச்சிக்காக மட்டுமே இந்த தலைப்பை பயன்படுத்தியிருக்கிறார் என்பது மட்டும் புலனாகிறது.
தலைப்பை மனதில் வைத்து படம் பார்க்கிற வருகிறவர்கள் கதையில் எங்கே ஈகோ இருக்கிறது என்பதை தேடும் நிலைமைக்கு தள்ளியிருக்கிறார் இயக்குனர்.
ஏ.வி.வசந்த் ஒளிப்பதிவு படம் முழுக்க ஜொலித்திருக்கிறது. ரெயில் காட்சிகளும், பாடல் காட்சிகளும் இவருடைய ஒளிப்பதிவில் மிளிர்கின்றன. பாடல்கள் கேட்கும் ரகம்தான் என்றாலும் பின்னணி இசையில் ரெக்கை கட்டி பறந்திருக்கிறார் இசையமைப்பாளர்.
மொத்தத்தில் ‘ஈகோ’ கலகலப்பில்லை.