கதாநாயகன் எம்.பாண்டியன் வெட்டியான் வேலை பார்ப்பவர். நாயகி ரசிகப்ரியா 12-ம் வகுப்பு படிக்கிறார். நாயகியின் பெயரில் ஏகப்பட்ட சொத்து இருக்கிறது. ஆனால், அப்பாவும், அம்மாவும் உயிரோடு இல்லை. இவரது அப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வந்த சித்தியும், அவளுக்கு பிறந்த மகனும் சேர்ந்து இவளிடமிருந்து எப்படியாவது சொத்தை எழுதி வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இது கதாநாயகிக்கு தெரிய வர, வீட்டை விட்டு வெளியேறுகிறார். காடு வழியாக தப்பித்துச் செல்லும்போது சில பேர் நாயகியை விரட்டுகின்றனர். அப்போது அங்கே வரும் நாயகன் அவளை அவர்களிடமிருந்து காப்பாற்றுகிறார்.
அவளைக் காப்பாற்றும் நாயகன், அவளிடம் என்னை கல்யாணம் செய்துகொண்டது போல், தன் அம்மாவிடம் நடிக்குமாறு கேட்டுக் கொள்கிறார். அதனால், தன்னுடைய வீட்டில் பாதுகாப்பாக இருக்கலாம் எனவும் யோசனை கூறுகிறான்.
இதனை ஏற்று நாயகி அவனுடன் செல்கிறாள். நாயகியை வீட்டுக்கு அழைத்து வரும் நாயகன் அவனது அம்மாவிடம் இவள்தான் என்னுடைய மனைவி என கூறுகிறார். அவளும் தன்னுடைய கனவில் மருமகளாக தெரிந்த பெண்ணே தனக்கு மருமகளாக நேரில் வந்திருக்கிறாள் என எண்ணி பெரிதும் மகிழ்கிறாள். அவளை அன்போடும், அரவணைப்போடும் கவனித்து வருகிறார்.
நாளடைவில் நாயகனுக்கு நாயகிமீது காதல் வரவே, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றால் பணம் வேண்டும். எனவே, பணத்தை ஏற்பாடு செய்வதற்காக தனது வீட்டுக்கு சென்று தனக்கு வேண்டியதை எடுத்துவர நாயகி முடிவு செய்கிறாள்.
இறுதியில், நாயகி திருமணத்துக்கு வேண்டிய பணத்தை எடுத்து வந்து நாயகனை கரம்பிடித்தாரா? இல்லை சித்தியின் கையில் அகப்பட்டு சிக்கிக் கொண்டாரா? என்பதே மீதிக்கதை.
நாயகன் எம்.பாண்டியன் முகம் முழுவதும் தாடியுடன் ஒரு வெட்டியானுக்குண்டான மிடுக்குடன் படத்தில் வருகிறார். சண்டைக்காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் ஓரளவு நடித்திருக்கிறார்.
நாயகி ரசிகப்ரியா பார்க்க அழகாக இருந்தாலும், நடிப்பில் ஏனோ தேறவில்லை. இவர் காதல் செய்யும் காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை. கவர்ச்சி என்ற பெயரில் காமெடியாக நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக வரும் எஸ்.எஸ்.லட்சுமி நடிப்பில் மிளிர்கிறார். இவரது கதாபாத்திரம் மிகவும் நேர்த்தியானது.
அழகான கதையை நேர்த்தியான காட்சிகளாக படம்பிடிக்காமல் இயக்குனர் ஆறுமுகசாமி கோட்டை விட்டிருக்கிறார். முக்கியமான கதாபாத்திரங்களின் பெயர்களை சொல்லாமலேயே கதையை நகர்த்தி ரசிகர்களை குழம்ப வைத்திருக்கிறார்.
சார்லஸ் தனா இசையில் பாடல்கள் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பின்னணி இசையும் ரசிக்கும்படியாக இல்லை. சி.கணேஷ்குமார் ஒளிப்பதிவில் தெளிவில்லை.
மொத்தத்தில் ‘அப்பாவுக்கு கல்யாணம்’ யாருக்கும் சொல்ல வேணாம்.