சிறுவயதில் தன் தாயை இழந்து தந்தையின் உதவி இல்லாமல் தன் தம்பி பாலாஜியை வளர்த்து வருகிறார் மெய்யழகியான ஜெய்குவேதனி. மாற்றுத்திறனாளியான பாலாஜிக்கு அம்மாவுக்கும் மேலான பாசத்தை ஊட்டி வளர்த்து வருகிறார். இவருடைய அப்பா குடித்துவிட்டு குடும்பப் பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி வருகிறார்.
தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தம்பி பாலாஜி என்னுடனே இருக்கவேண்டும் என்று வருகிற மாப்பிள்ளை வீட்டாரிடம் நிபந்தனை வைக்கும் ஜெய்குவேதினியை, இவருடைய தம்பியின் அவலநிலையை பார்த்து மாப்பிள்ளை வீட்டார் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடுகின்றனர்.
இந்நிலையில், அதே ஊரில் தலைவராக இருக்கும் அருண்மொழி வர்மன் மெய்யழகியை அடைய துடிக்கிறார். இதற்கு தன் மனைவியின் ஜோதிட நம்பிக்கையை பகடைக் காயாக பயன்படுத்துகிறார். இதற்கு மசிய மறுக்கிறார் மெய்யழகி.
இறுதியாக, அந்த ஊர் தலைவர் மெய்யழகியின் அப்பாவை தன்வசமாக்கிக் கொண்டு, மெய்யழகியை அடைய முயல்கிறார். இதிலும் அவருக்கு தோல்வியே கிடைக்க மெய்யழகிக்கு நிறைய தொல்லை கொடுக்கிறார்.
இந்த தொல்லையிலிருந்து விடுபட மெய்யழகி அந்த ஊரிலேயே வாழும் அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார். இறுதியில், வில்லன் மெய்யழகியை அடைந்தாரா? மெய்யழகி அர்ஜுனை கரம்பிடித்து வில்லனின் பிடியிலிருந்து தப்பினாரா? என்பதே மீதிக்கதை.
மெய்யழகியாக வரும் ஜெய்குவேதனி கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். பாசமிகு அக்காவாக பளிச்சிடுகிறார். ஊனமுற்றவராக வரும் பாலாஜி முந்தைய படங்களில் நடித்ததைவிட வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து நம்மை பிரமிப்பூட்டியிருக்கிறார். மாற்றுத்திறனாளியாக தனது உடல்மொழியை அழகாகவும், அதே நேரத்தில் தெளிவாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார். விருதுக்கு உரிய நடிப்பு.
வில்லனாக வரும் அருண்மொழி வர்மன், அவருடைய மனைவியாக வரும் ஜெனி ஜாஸ்மின், பாலாஜியின் அப்பாவாக வரும் ராம்ராஜ், இரண்டாவது ஹீரோவாக வரும் அர்ஜுன் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
அக்கா, தம்பி பாசத்தை நீண்ட இடைவெளிக்கு தமிழ் சினிமாவில் பார்க்க முடிந்த சந்தோஷத்தை கொடுத்த இயக்குனர் ஜெயவேலுக்கு பாராட்டுக்கள். எல்லா கதாபாத்திரங்களையும் திறம்பட வேலைவாங்கியிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் நெஞ்சை வருடுகின்றன. தன்னுடைய முதல் படத்திலேயே திறமையான இயக்குனர் என பெயர் வாங்கியுள்ளார்.
அபிஷேக் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஓரளவு திறம்பட உழைத்திருக்கிறார். வெங்கடேஷ் அர்ஜுன் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகை பார்க்க முடிகிறது.
மொத்தத்தில் ‘மெய்யழகி’ பாசப்பிணைப்பு.