கிராமத்தில் ஓட்டல் நடத்துபவர் ரோஜா. மகள் ஐஸ்வர்யா மேல் பாசத்தை பொழிந்து படிக்க வைக்கிறார். அந்த ஊருக்கு தம்பி ராமையா போலீஸ் ஏட்டாக வருகிறார். இவருக்கு தன்னை அவமானபடுத்துபவர்களை உறவாடி கெடுக்கும் குரூர குணம்.
ரோஜாவும், ஐஸ்வர்யாவும் ஒரு சந்தர்ப்பத்தில் தம்பி ராமையாவை அடித்து அவமானப்படுத்துகின்றனர். அவர்களை பழிவாங்க துடிக்கிறார் தம்பி ராமையா. ரோஜாவிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யாவிடம் அன்பாக பேசி அழைத்து வருகிறார். தன் வீட்டில் தங்க வைத்து ரவுடிக்கு மது வாங்கி கொடுத்து கற்பழிக்கும்படி ஏவுகிறார்.
இதிலிருந்து ஐஸ்வர்யா தப்பித்து மீண்டும் தாயுடன் சேர்ந்தாரா? என்பது மீதி கதை...
கிராமிய பின்னணியில் காதல், குடும்ப சென்டிமென்ட் என கலகலப்பாக காட்சிகள் நகர்கின்றன. ரோஜா சேலையில் கவர்ச்சியாக வசீகரிக்கிறார். கோபித்து போன மகளை தேடி அலைந்து பாசத்தில் ஜீவன் ஏற்றுகிறார்.
நாயகனாக வரும் வத்சன் ஒருதலை காதலில் ஈர்க்கிறார். தன்னால் தங்கை பிரிந்ததை நினைத்து உருகுவதும் இருவரையும் சேர்த்து வைக்க தேவாலயத்தில் வேண்டுவதும் நெகிழ்ச்சி.
ஐஸ்வர்யா சிரிப்பும் முறைப்புமாய் கவர்கிறார். வத்சனை காதலிக்க மறுத்து விரட்டியும் தாயை மற்றவர்கள் தப்பாக பேசுவது கண்டு நொறுங்கும் கேரக்டரில் அழுத்தமாய் பதிகிறார்.
தம்பி ராமையா வித்தியாசமான வில்லன் கேரக்டரில் குரூரம் காட்டுகிறார். ஆரம்ப சீன்கள் வலுவின்றி நகர்ந்தாலும் போக போக வேகமும் விறுவிறுப்பும் அடுத்து என்ன என்ற பதட்டமுமாக காட்சிகளை நகர்த்தி ஒன்ற வைக்கிறார் இயக்குனர் ஆர்.கே.கலைமணி. பிரபாகரன் கேமரா கிராமத்து அழகை அள்ளுகிறது. மணிசர்மா பின்னணி இசை துணை நிற்கிறது.