சென்னையில் வசிக்கும் கதாநாயகன் விக்ரம் ஆனந்த், ஹாஸ்டலில் தங்கி படிக்கும் கதாநாயகி ரெஜினாவை காதலிக்கிறார். இவர்கள் காதல், விக்ரம் ஆனந்த் பெற்றோருக்கு தெரிய வருகிறது. ரெஜினா பெற்றோரை இழந்து அனாதை என்பதால் அவளை ஏற்க மறுக்கிறார்கள்.
இந்த நிலையில் விக்ரம் ஆனந்துக்கு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை கிடைக்கிறது. இந்த விஷயத்தை காதலியிடம் சொல்லி, இங்கு என் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மத்திக்கமாட்டார்கள். அதனால் பெங்களூரில் வென்று வாழலாம் எனக் கூறுகிறார். இதற்கு சம்மதித்து ரெஜினாவும் அவருடன் செல்கிறார். அங்கு இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
வேதிகா என்ற ஒரு பெண் குழந்தையும் அவர்களுக்கு பிறக்கிறது. அனாதையான தன் காதலியுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ அதிக கடன் வாங்குகிறான் விக்ரம் ஆனந்த். ஒருகட்டத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் கடன்காரர்கள் வீட்டுக்கே வந்து கடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். அப்போது தேவிகாவிற்கு 4 வயது ஆகிறது.
கடன்தொல்லையால் கணவன்- மனைவிக்குள் சண்டை வருகிறது. சண்டையின் உச்சகட்டமாக, மனைவியை கோபத்தில் அடிக்கிறான் விக்ரம். இதில் மயக்கமடைந்து விழுந்த ரெஜினா இறந்து விடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த விக்ரம் ஆனந்த், தனது 4-வயது மகள் வேதிகாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்னை வருகிறார். வரும் வழியில் மோட்டார் சைக்கிள் ரிப்பேர் ஆகிறது. மோட்டார் சைக்கிளை ரிப்பேர் பார்க்கும் கடையில் விட்டுவிட்டு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் சரண்யாவிடம் சென்று, மோட்டார் சைக்கிள் ரிப்பேர் ஆகிவிட்டது. அதனை சரிசெய்ய 10 நாட்கள் ஆகுமாம். தன்னிடம் பணம் இல்லை. ஆகையால் 10 நாட்கள் வேலை இருந்தால் தாருங்கள் என்று கேட்கிறான். சரண்யாவும் பாவம் பார்த்து ஒரு வேலை கொடுக்கிறார்.
வேலை பார்க்கும் இடத்தில் விக்ரம் மகளிடம் ஏன் பெங்களூரில் இருந்து வந்தீர்கள் என்று ஒருவன் கேட்க, அவள் என் அம்மாவை அப்பா கொன்றுவிட்டு என்னை அழைத்து வந்தார் என்கிறார். இதைக்கேட்ட அவர் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார். போலீசார் அவனை தேடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் போலீசில் விக்ரம் மாட்டிக்கொண்டானா? அவனது மகள் வேதிகா என்ன ஆனாள் என்பது மீதிக்கதை. செல்வகணேஷ் இசையில் பாடல்கள் சுமார் ரகம். இயக்குனர் படத்தை சோகமாகவே நகர்த்தியிருக்கிறார்.