இந்தியாவின் வளர்ச்சியை சீர்குலைக்க வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை ஊடுருவ செய்ய முடிவெடுக்கிறது. அதன்படி, இந்தியாவில்
மத்திய அமைச்சர் ஒருவரை கொலை செய்வதற்காக நாயகன் விஜயகுமார் மற்றும் ஜெய்பாலாவை தமிழகத்துக்கு அனுப்பி வைக்கிறது.
பணத்துக்காக இந்த கொலை செய்யவரும் இருவரும் சென்னையில் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்குகின்றனர். இருவரும் மத்திய அமைச்சரை எப்படி கொலை செய்யலாம் என திட்டம் போட்டு வருகின்றனர். இதற்கிடையில், கல்லூரியில் படிக்கும் இனியாவை பார்த்தவுடனேயே அவள்மீது காதல் கொள்கிறார் விஜயகுமார். இனியாவும் இவருடைய காதலை ஏற்றுக் கொள்கிறார்.
இருவரும் காதல் செய்து கொண்டிருக்கும் வேளையில், விஜயகுமார்-ஜெய்பாலா குழுவுக்கு சென்னையில் உள்ள முக்கிய இடங்களை குண்டுவைத்து தகர்க்க வேண்டும் என்று மற்றொரு வேலை வருகிறது. காதலில் விழுந்த விஜயகுமாருக்கு அப்பாவி பொதுமக்களை கொலை செய்ய மனம் ஒப்பவில்லை. அதனால், இந்த செயலை செய்யமுடியாது என ஜெய்பாலாவிடம் கூறுகிறார். ஆனால், ஜெய்பாலா விஜயகுமாரை சமாதானம் செய்கிறார். ஆனால் விஜயகுமார் சமாதானம் அடையவில்லை.
இதில் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது. எனவே, ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். முடிவில், விஜயகுமார்-ஜெய்பாலா இருவரும் போலீசிடம் மாட்டினார்களா? இனியாவுடன் விஜயகுமார் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
விஜயகுமார்-ஜெய்பாலா இருவரும் தீவிரவாதிகள் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள். விஜயகுமாரும் இனியாவும் காதல் செய்யும் காட்சிகள் அருமை. அப்பாவி பொதுமக்களை கொல்லவேண்டும் என்ற ஜெய்பாலாவின் ஆக்ரோஷம் பயமுறுத்துகிறது. நிறுத்தி நிறுத்தி பேசும் இவருடைய கதாபாத்திரத்தின் பாணியை அமைத்திருந்த விதம் அருமை.
மக்கள் நல பணியாளராக வரும் கஞ்சா கருப்பு ஒருசில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். சுரேஷ், ப்ரீத்தி, கார்த்தி என்று பலரும் புதுமுகங்களாக நடித்திருக்கிறார்கள். ஒருசிலர் மனதில் ஒட்டினாலும், பலபேருடைய கதாபாத்திரம் மனதை வருடாமலேயே சென்றுவிடுகிறது.
அன்பு என்ற ஒன்று மட்டும் இருந்தால் தீவிரவாதத்தை அறவே ஒழித்துவிடலாம் என்ற கருத்தை வலியுறுத்தி படத்தை எடுத்த இயக்குனர் ஜெஃபியை பாராட்டலாம். காட்சிகளை கோர்வைப்படுத்துவதில் இயக்குனர் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். டி.ஜே.கோபிநாத் இசையில் பாடல்கள் ஒன்றும் மனதில் நிற்கவில்லை. தஷியின் பின்னணி இசையில் மேலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘நுகம்’ ரசிக்க முடியாத ரகம்.