கும்பகோணத்தில் குத்து விளக்கு வியாபாரம் செய்யும் பிரமிட் நடராஜனுக்கு ஸ்ரீமன், சத்யன், தனுஷ் என மூன்று பிள்ளைகள். இதில் கடைக்குட்டி தனுஷ். எந்த வேலையும் செய்யாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரியும் தனுஷ், தனது பாட்டி வீட்டுக்கு வரும் நஸ்ரியாவைப் பார்த்தவுடனேயே காதலில் விழுகிறார். முதலில் தனுஷின் காதலை மறுக்கும் நஸ்ரியாவின், பின்னாலேயே சுற்றி காதல் வலையில் விழ வைக்கிறார் தனுஷ்.
இவர்களுடைய காதல் வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் வேளையில், நஸ்ரியாவின் அப்பா ‘ஆடுகளம்’ நரேன் நஸ்ரியாவுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிடுகிறார். இதுதெரியாமல் நஸ்ரியாவின் பிறந்த நாளுக்கு சஸ்பென்சாக அவரைப் பார்க்கவரும் தனுசுக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. இதையடுத்து இருவரும் வீட்டை விட்டு ஓட்டம் பிடிக்கின்றனர். பின், யாருக்கும் தெரியாமல் கல்யாணம் செய்து கொள்கின்றனர்.
தன்னுடைய இரண்டு அண்ணன்களுக்கும் கல்யாணமாகாத நிலையில், தான் மட்டும் கல்யாணம் செய்து கொண்டது வீட்டில் தெரிந்தால் பெரிய பூகம்பமே வெடிக்கும் என்று பயந்து, நஸ்ரியாவை தன்னுடைய நண்பன் சூரியின் உதவிடன் தன் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார் தனுஷ். அநாதை என்று சொல்லி தனுஷ் வீட்டிலேயே வேலைக்கும் சேர்த்து விடுகிறார்.
அங்கு தனுஷின் அண்ணன்களான ஸ்ரீமனும், சத்யனும் நஸ்ரியாவை சுற்றி வருகின்றனர். அவர்களுடைய தம்பியின் மனைவிதான் நான் என்று அவர்களிடம் சொல்லமுடியாமல் தவிக்கிறார் நஸ்ரியா. மறுமுனையில், நஸ்ரியாவுக்கு நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை, தனுசை தீர்த்துக்கட்ட அடியாட்களுடன் வலம் வருகிறார்.
இறுதியில், நஸ்ரியா தன் மனைவி என்று சொல்லி வீட்டில் உள்ள குழப்பத்தை தனுஷ் தீர்த்து வைத்தாரா? தனுசை தீர்த்துக்கட்ட அலையும் கொலைகார கும்பலிடம் தனுஷ் சிக்கினாரா? என்பதே மீதிக்கதை.
கலகலப்பான கதாபாத்திரம் என்றால் அது தனுசுக்கு பொருத்தமானதுதான். இந்த படத்திலும் அவருக்கும் அதுமாதிரி அமைந்ததில் வெளுத்து வாங்கியிருக்கிறார். இடைவேளையின் போதும், கிளைமாக்ஸ் காட்சியின்போதும் எதிரிகளை பந்தாடுவதில் மிரட்டுகிறார்.
நஸ்ரியா துறுதுறு நடிப்பு, அழகிய முகம் என மனதை கொள்ளையடிக்கிறார். தனுஷின் அப்பாவாக வரும் பிரமிட் நடராஜன் குத்துவிளக்கை கையில் வைத்துக் கொண்டு மகன்களை அடித்து துவைக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது.
தனுஷின் நண்பர்களாக வரும் சூரி, சதீஷ், இமான் அண்ணாச்சி, அஸ்வின் ராஜா ஆகியோர் முற்பாதியிலும், தனுஷின் அண்ணன்களாக வரும் ஸ்ரீமன், சத்யா ஆகியோர் பிற்பாதியிலும் அவரவருடைய பாணியில் வசனங்களை அள்ளிவிட்டு கலகலப்பூட்டியிருக்கிறார்கள்.
‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய தரமான படங்களைக் கொடுத்த சற்குணம் இந்த படத்தின் கதையமைப்பை செம்மைப்படுத்துவதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். தனுஷ் என்ற தேசிய விருது நடிகரை வைத்து, ஒரு தேசிய விருது இயக்குனர் இயக்கிய படமா இது என நம்மை நெளிய வைக்கிறது.
ஜிப்ரான் இசையில் ‘இனிக்க இனிக்க’ பாடல் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை. வேல்ராஜின் ஒளிப்பதிவு அழகாக இருக்கிறது.
மொத்தத்தில் ‘நய்யாண்டி’ கலகலப்பூட்ட நொண்டியடித்திருக்கிறது.