பணக்கார பொண்ணும் நடுத்தர வர்க்க பையனும் அதே ஆதி காலத்து கதைதான் பொன்மாலை பொழுது.
ஆதவ் கண்ணதாசனும் காயத்ரியும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். காயத்ரியின் அப்பா அருள்தாஸ் எந்நேரமும் சந்தேகத்தோடும், கண்டிப்பாகவும் இருப்பவர்.
ஆதவின் அப்பா கிஷோர் இதற்கு நேர்மாறானவர். மகன் சிகரெட் அடிப்பதைக்கூட தட்டி கேட்க தயங்குபவர். அன்பான அப்பா. ஆதவ், காயத்ரியிடம் நட்பாக பழகுவதை கண்டு அடித்து அவமானப்படுத்தி விடுகிறார் அருள்தாஸ். அதன் பின்பு ஆதவ், காயத்ரி தீவிரமாக காதலிக்கிறார்கள்.
பள்ளி பருவத்து தீவிர காதல் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அதற்கு கிஷோர் என்ன முடிவு எடுத்தார் என்பதையும் இயக்குனர் யதார்த்தமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆதவ் அழகாக இருக்கிறார். நடிக்க முயற்சித்திருக்கிறார். கதாநாயகி வீட்டு வாசலிலே நின்று, அவள் அப்பனிடம் அடிவாங்கி கொண்டே இருக்கும் கதையில் வேறு என்ன நடித்துவிட முடியும்.
காயத்ரி அழகாக இருக்கிறார். மற்றபடி காதல் காட்சிகளிலும் சோகக் காட்சிகளிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார். ரெண்டும் ஒன்றுதானென்று நினைத்து விட்டார்போல. கிஷோர் திறமையான நடிகர். அவருடைய பாத்திரத்தை அவர் திறமையாகவே செய்திருக்கிறார். இருந்தாலும் அவருடைய மகனை காயத்ரி அண்ணண் அடித்து நொருக்கியபோதுகூட ஒரு தகப்பனாக குறைந்தபட்ச கோபத்தைகூட வெளிப்படுத்தாமல் அவரை நடிக்க வைத்திருப்பது பொருத்தமாக இல்லை.
காயத்ரியின் அப்பாவாக அருள்தாஸ். இரும்புக் கடை வைத்திருக்கும் அண்ணாச்சியாக நெல்லை தமிழில் ரொம்ப கச்சிதம். அதுவும் அவருடைய உடை, நடையும், மேரி மாதா மேல் உருகும் பக்தியும் நடிப்பே என்று தெரியாத அளவுக்கு பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருடைய பாத்திரத்தையும் போகப் போக காமெடியாக்கி விடுகிறார்கள்.
கிஷோரின் மனைவியாக வரும் அனுபா குமார், இரண்டு காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைக்கும். தினந்தோறும் நாகராஜ் கிடைத்த வாய்பை பயன் படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் ஏ.சி.துரை யதார்த்தமான காதல் கதையை சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால் சுவராஸ்யமே இல்லாத திரைக்கதையால் ஒரு பலனும் ஏற்படவில்லை. படத்தில் வரும் அப்பா, அம்மா மாதிரியான போன தலைமுறை கதாபாத்திரங்களை எல்லாம் தெளிவாக அழகாக உருவாக்கிய இயக்குனர் இன்றைய தலைமுறை பள்ளி மாணவர்களை சரியாக புரிந்து கொள்ளாததுபோல் எடுத்திருக்கிறார்.
பள்ளியில் இருப்பதைவிட பப்பில் அதிகமாக இருப்பதாக காட்டுவது, அதிகம். அதுவும் காயத்ரி வீடு தீ பற்றி எரியும் போது எல்லோரும் தீயை அணைக்க போராட, நடுத்தெருவில் காயத்ரி, ஆதவ்வை கட்டிபிடித்துக் கொண்டு நிற்பது எல்லாம் என்ன விதமான கற்பனையோ?. ஒளிப்பதிவு ராஜேஷ் ஒளிவீரன். நகர வாழ்க்கையை அழகாக படம் பிடித்திருக்கிறார். பாடல்களும் பளிச்சென்று இருக்கிறது.
சத்யாவின் இசையில் பாடல்கள் ஏற்கனவே பெரிய வெற்றி பெற்றது. காட்சிகளாக பார்க்கும் போது இன்னும் அழகாக இருக்கிறது. படத்தின் முடிவை எளிதாகவும், யதார்த்தமாகவும் முடித்தவர், அதற்கு முந்தைய காட்சிகளையும் அதே சுவாரஸ்யத்தோடு அழகாக செய்திருந்தால் நல்ல படமாக வந்திருக்கும். மொத்தத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ இதமில்லை.