ஆடம்பர காரில் அடியாட்கள் பாதுகாப்புடன் கல்லூரியில் படித்து வரும் ஸ்ரீரம்யாவை, அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் சத்யா ஒருதலையாக காதலிக்கிறார். ஒருகட்டத்தில் சத்யாவின் காதலை ஸ்ரீரம்யா மறுக்க விரக்தியில் சத்யா மொட்டை மாடியில் நின்று குதித்து தற்கொலைக்கு முயல்கிறார்.
பலத்த காயத்துடன் சத்யாவை ஆஸ்பத்திரிக்கு தூக்கி போய் காப்பாற்றுகின்றனர். தன் மீதான சத்யாவின் காதலை உணர்ந்து ஸ்ரீரம்யா காதலை ஏற்கிறார். இருவரும் காதல் பறவையாய் சுற்றுகின்றனர்.
அப்போது ஸ்ரீரம்யா திடீரென மாயமாகிறார். சில நாட்களுக்கு பிறகு கல்லூரிக்கு திரும்பும் அவர், சத்யாவிடம் காதலை முறித்துக் கொள்ள நிர்ப்பந்திக்கிறார். அடியாட்களும் சத்யாவை துவைத்தெடுக்கின்றனர். இதனால் மனம் நொறுங்கும் சத்யாவுக்கு ஸ்ரீரம்யா யார் என்ற பின்புலம் தெரிய அதிர்ச்சியில் உறைகிறார். காதலே வேண்டாம் என வெறுத்து ஓடுகிறார்.
சத்யா அதிர காரணமான ஸ்ரீரம்யாவின் பின்புலம் என்ன? இருவரும் சேர்ந்தார்களா? என்பது மீதி கதை...
காதல் கதையை சஸ்பென்ஸ், திருப்பங்களுடன் நகர்த்துகிறார் இயக்குனர் கணேஷ்பாபு.
கல்லூரி மாணவராக துறுதுறுவென வருகிறார் சத்யா. விபத்தில் அவர் இறந்ததாக கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடக்க பைக்கில் திடீரென வந்து ஆஜராகி கலகலக்க வைக்கிறார். விலை மாது வீட்டுக்கு போய் ஸ்ரீரம்யாவை கட்டிலில் பார்த்து நொறுங்குவதில் அழுத்தம் பதிக்கிறார். காதலிக்காக போராடி கிளைமாக்சில் அனுதாபம் அள்ளுகிறார்.
ஸ்ரீரம்யா பளிச்சிடுகிறார். குப்பத்து வாழ்க்கையும் விபசார தாதா கும்பலிடம் சிக்குவதுமான அவரது பிளாஷ்பேக் கதை அதிரவைக்கிறது. விபசார கும்பல் தலைவியாக வரும் வினோதினி அழகான ராட்சசி, சத்யா ‘திடும்’ என காதலுக்காக, சாகத்துனிவது ஈர்க்கவில்லை. கிளைமாக்சில் அவர் கதையை முடிப்பதும் அநாவசியம். பாலாசிங், பசங்க சிவக்குமார் கேரக்டர்கள் நேர்த்தி.
இலக்கியன் இசையில் வைரமுத்துவின் பாடல் வரிகளில் ஜீவன் இருக்கிறது. பொ.சிதம்பரம் திறம்படி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மொத்தத்தில் ‘யமுனா’ சீராக ஓடும்.