தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் இனியா. இதே கிராமத்தில் வசிக்கும் உயர் சாதி பணக்கார இளைஞன் ராம்கி. இருவருக்கும் காதல் மலர்ந்து நெருங்கி பழகுகிறார்கள். அதில் இனியா கர்ப்பமாகிறார். அவரை திருமணம் செய்துகொள்ள ராம்கி முடிவெடுக்கிறார்.
இதை அவரது அண்ணன் சரத்பாபு, அண்ணி ரோஜா எதிர்க்கின்றனர். ராம்கி பிடிவாதமாக இருப்பதால் உணவில் விஷம் கலந்து கொல்லப்படுகிறார். இனியாவை கிராமத்தில் இருந்து ஒதுக்கி வைக்கின்றனர். அவர் ஒரு ஆண் குழந்தையை பெற்று போட்டுவிட்டு சாகிறார்.
அதே ஊருக்கு சாமி சிலை செய்யும் சிற்பி ஒய்.ஜி.மகேந்திரனை இனியாவின் துயரம் சங்கடப்டுத்துகிறது. சிலை வடிக்கும் வேலையை பாதியிலேயே போட்டுவிட்டு குழந்தை எடுத்துப் போய் தனது ஊரில் வைத்து வளர்க்கிறார். சிலை வேலையை முடிக்க வேறு சிற்பிகள் வரவழைக்கப்படுகின்றனர். அவர்களை ஆவியாக மாறிய இனியா விரட்டுகிறார். அக்கிராமத்தில் உயிர் பலிகளும் நடக்கின்றன.
சாமி சிலை வேலையை முடித்தால்தான் அசம்பாவிதங்கள் நடப்பது நிற்கும் என மந்திரவாதி சொல்கிறான். இதனால் மீண்டும் அப்பணியை முடிக்க கேட்டு ஒய்.ஜி.மகேந்திரனை ஊர்க்காரர்கள் அணுகுகின்றனர். அவர் இனியாவின் மகன் அகிலை அனுப்புகிறார். சாமி சிலையை அவர் செய்து முடித்தாரா? என்பதே கிளைமாக்ஸ்.
மாசாணியாக இனியா வாழ்ந்திருக்கிறார். முந்தானையை மாராப்பாக ஆக்கி அழகிலும் நம்மை வசீகரிக்கிறார். திருட்டு போன ராம்கி மோதிரத்தை சாணி பிள்ளையால் மூலம் மீட்டுக் கொடுப்பது, தேங்காய் வைத்து நிலத்தடி நீரை கண்டுபிடிப்பது என கிராமத்து பெண்ணாய் பளிச்சிடுகிறார். வயிற்றில் குழந்தையை சுமந்து ஒரு வாய் தண்ணீர் கொடுக்காமல் கிராமத்தினர் அடித்து துரத்தும் போது கலங்க வைக்கிறார்.
ராம்கி நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதே இளமையோடு மறுபிரவேசம் எடுத்துள்ளார். சாதி வித்தியாசம் பார்க்காமல் தாழ்ந்த சாதியினருடன் பழகுவது, வீடு கட்ட ஓலை திருடிய பெண்ணுக்கு வண்டி நிறைய ஓலைகள் கொண்டு கொடுப்பது போன்ற காட்சிகள் உயிர்ப்பானவை. இனியாவுடன் ஒட்டி உரசி காதல் வயப்படுவது சுவாரஸ்யம். ஆக்ஷனிலும் புயலாக சீறுகிறார்.
அகில், சிஜா ரோஸ் சந்திப்பும், அவர்களுக்குள் நடக்கும் சிறுசிறு சீண்டல்களும் ஈர்க்கிறது. பேயின் உருமல்கள் பயமுறுத்துகிறது. குழந்தை அந்தரத்தில் நின்று குருக்களை மிரட்டுவது... அகில் உடலுக்குள் ஆவி புகுந்து ரவுடிகளை பந்தாடுவது.... மனோபாலா சைக்கிள் தானாக சுற்றுவது.... சுடுகாட்டில், டீ கடையில் பிளாக் பாண்டி டீ குடிக்கும் கடை திடீரென மாயமாக குலை நடுங்குவது போன்றவை பயமுறுத்த வைக்கின்றன.
உள்ளூர் மைனராக வரும் சிட்டி பாபு கலகலப்பூட்டுகிறார். சிஜா ரோஸ் அழகில் நம்மை ஈர்க்கிறார். ரோஜா வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். பேய்க் கதையை பயமும் விறுவிறுப்புமாக நகர்த்துகின்றனர் இயக்குனர்கள் பத்மராஜா, எல்.ஜி.ஆர். சாதியை தகர்க்க சாமி சிலையை வைத்து தீர்வு சொல்லும் கிளைமாக்ஸ் சபாஷ் போட வைக்கிறது. பாசில் இசையும், ராஜகுரு ஒளிப்பதிவும் படத்தோடு ஒன்ற வைக்கின்றன. பாடல்கள் இனிமையாக ரசிக்க வைக்கின்றன.
மொத்தத்தில் ‘மாசாணி’ பயமுறுத்தினாலும் பயம் வரவில்லை....