சென்னையிலிருந்து பெங்களூருக்கு படிக்கப் போகிறார் சித்தார்த். அதே கல்லூரியில் அஷ்ரிதா ஷெட்டியும் படிக்கிறார். ஒரே கல்லூரியில் படிக்கும் இருவரும் ஒரு காலகட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இவர்கள் காதல் விஷயம் அஷ்ரிதா ஷெட்டியின் அப்பாவான அவினாஷூக்கு தெரிந்துவிடுகிறது. அவினாஷ் பெங்களூரில் மிகப்பெரிய அரசியல்வாதி. தனது மகளின் காதலை பிரிப்பதற்காக அஷ்ரிதாவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கிறார்.
இந்த விவகாரம் காதல் ஜோடிகளுக்கு தெரியவர, இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். அஷ்ரிதா ஷெட்டிக்கு 18 வயது பூர்த்தியடைய ஒருநாள் இருக்கும் பட்சத்தில் இருவரும் பெங்களூரை விட்டு சென்னைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.
தனது பண பலத்தையும், அதிகார பலத்தையும் வைத்து இருவரையும் பிடிக்க என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியான கே.கே.மேனனை ரகசியமாக நியமிக்கிறார் அவினாஷ். மொபைல் சிக்னல் மூலமாக சித்தார்த் - அஷ்ரிதா ஜோடியை பெங்களூர்-சென்னை நேஷனல் ஹைவேயில் இவர்கள் போய்க் கொண்டிருப்பதை கண்டறியும் கே.கே.மேனன் அவர்களை பிடிக்க துப்பாக்கியும், கையுமாக பின் தொடர்கிறார்.
இறுதியில் சித்தார்த்-அஷ்ரிதா ஜோடி ஒன்று சேர்ந்தார்களா? அஷ்ரிதா 18 வயது பூர்த்தியடைவதற்குள் கே.கே.மேனன் பிடித்து தந்தையிடம் ஒப்படைத்தாரா? என்பதே மீதிக்கதை.
இதுவரை சாக்லேட் பாயாக ரசித்து வந்த சித்தார்த் இந்த படத்தின் மூலம் தனக்கு ஆக்ஷன் கதைக்களத்திலும் அதிரடி காட்டமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். புத்திசாலித்தனமாக இவர் செய்யும் ஒவ்வொரு நகர்வும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. ரொம்பவும் ஆர்ப்பாட்டமில்லாமல் இயல்பாக நடித்துள்ளார். படத்தில் தமிழ் பேசும் ஒரே நபர் இவரே.
அஷ்ரிதா ஷெட்டி குடும்ப பாங்கான தோற்றத்தில் அழகாக இருப்பதோடு, நடித்திருக்கவும் செய்திருக்கிறார். இவர் காதல் செய்யும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், சித்தார்த்தோடு இணைந்து ஓடுவதில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் கே.கே.மேனன் தமிழுக்கு புதுசு என்றாலும் படத்தில் ரசிக்கக்கூடிய கதாபாத்திரம் இவருடையதுதான். சில இடங்களில் பார்வையாலேயே மிரட்டுகிறார். இவருடைய மேனரிசங்கள் பல இடங்களில் கைதட்டல் பெறுகின்றன.
சித்தார்த்தின் நண்பர்களாக வரும் அஜய், கலை, கார்த்தி, தீபக் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரும் தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கின்றனர்.
சாதாரண கதையாக இருந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமாக சொன்ன இயக்குனர் மணிமாறனை பாராட்டியே ஆகவேண்டும். இருப்பினும் இந்த படத்தில் இவருக்குன்னு தனி முத்திரை இல்லை. தனியாக படம் பண்ணும்போதுதான் இவருடைய முழு திறமையை கண்டறிய முடியும் என்பது நம் எண்ணம்.
படத்திற்கு மிக முக்கிய பலமே வெற்றிமாறனின் திரைக்கதையும் வசனம்தான். பெங்களூர்காரர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை ஆராய்ந்து அதை அப்படியே படத்தில் வசன மழையாக அள்ளி தெளித்திருக்கிறார் வெற்றிமாறன். படத்தில் அங்கங்கே சில சஸ்பென்ஸ் வைத்து படத்தை நகர்த்துவதால் படம் பார்க்கும்போது போரடிக்காமல் போகிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘யாரோ இவன்’, ஓரக்கண்ணாலே’ உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவில் சித்தார்த் ரெயிலில் தப்பிப் போகும் காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் பேசக்கூடியவை.
படத்தில் சில காட்சிகள் ரசிக்க வைத்தாலும், இடையிடையே வரும் பாடல்கள், சகிக்க முடியாத காதல் காட்சிகள் படத்தின் வேகத்திற்கு தடை போடுகின்றன.
மொத்தத்தில் ‘உதயம் என்.ஹெச் 4’ குடும்பத்தோடு பயணிக்கலாம்.