காதலியை தேடி வெளிநாடு போய் ஆபத்தில் மாட்டிக் கொண்டு மீளப்போராடும் இளைஞன் கதை...
தமிழக எல்லைப்பகுதியில் வனத்தை சுற்றி பார்க்க வருபவர்களுக்கு ‘கைடு’ ஆக இருப்பவர் விஷால். அங்கு வரும் சுனைனாவுக்கு விஷாலின் சாதுரியங்கள் பிடித்துபோக இருவருக்கும் காதல். ஒரு கட்டத்தில் விஷால் காட்டையே கட்டிக்கொண்டு அழுவது சுனைனாவுக்கு பிடிக்காமல்போக காதலை முறித்து கொண்டு பாங்காக் பறக்கிறார்.
காதல் தோல்வியில் விஷால் நொறுங்கி தவிக்கிறார். ஒருநாள் பாங்காங்கில் இருந்து சுனைனாவின் காதல் கடிதத்துடன் உடனே புறப்பட்டு வருமாறு டிக்கெட் பார்சலில் வருகிறது. அங்கு பயணப்படுகிறார் விஷால்.
விமானத்தில் போகும்போது திரிஷாவின் சினேகம் கிடைக்கிறது. பாங்காக்கில் இறங்கியதும் சுனேனா குறிப்பிட்ட இடத்தில் போய் தேடுகிறார். அவர் வரவில்லை. பல நாட்கள் காத்திருந்தும் ஏமாற்றம்.. சுனைனாவை கண்டுபிடிக்க திரிஷாவின் உதவியை நாடுகிறார் விஷால். அப்போது ஒரு கும்பல் விஷாலை கொல்ல துப்பாக்கியால் சுடுகிறது. இன்னொரு கோஷ்டி காப்பாற்றி பெரிய கம்பேனியில் அழைத்து போய் உட்கார வைத்து காணாமல் போன தங்களின் முதலாளி என கொண்டாடுகிறது.
பத்திரிகைகளில் பெரும் கோடீஸ்வரர் என வந்த அவரது படங்களையும் காட்டுகின்றனர். விஷால் நான் அவனல்ல என்று சொல்லியும் நம்ப மறுக்கின்றனர். போலீசும் சல்யூட் அடித்து மரியாதை கொடுக்கிறது.
திடீரென்று ஒருநாள் மரியாதைகள் காணாமல் போகிறது. முதலாளி என்று கொண்டாடியவர்கள் கம்பெனிக்குள் நுழைய விடாமல் விரட்டியடிக்கின்றனர். தன்னை சுற்றி சதி வேலை பின்னப்பட்டு இருப்பதை விஷால் உணர்கிறார். அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதன்பிறகு எதிர்பாராத திருப்பங்களுடன் அதிரடிகள்...
காட்டில் மரங்களை வெட்டும் கடத்தல் கும்பலை ஆக்ரோஷமாய் தாக்கி விஷால் அறிமுகமாகும் ஆரம்பமே சூடு பறக்கிறது. பிறகு சுனைனா காதல், முறிவு என போகும் கதை பாங்காக் பயணித்ததும் விறுவிறுப்புக்கு தாவுகிறது.
விஷாலை கொலை கும்பல் துப்பாக்கியுடன் துரத்துவது வியர்க்க வைக்கிறது. தன் அட்டை படத்துடன் பத்திரிகையில் வந்த செய்தியை பார்த்து அதிர்வது... பேரிய தொழில் அதிபர் என தன் மேல் முத்திரை குத்தப்பட்டதும் மறுத்து தப்பிக்க முயல்வது என மர்ம முடிச்சுகளுடன் படத்தோடு கட்டிப்போடுகின்றன. கிளைமாக்சில் தந்திரமாக எதிரிகளை வீழ்த்தி கைதட்ட வைக்கிறார்.
திரிஷா வழக்கமான காதல் சமாச்சாரங்களில் இருந்து வித்தியாசம் காட்டுகிறார். வில்லன்களுக்கும் அவருக்குமான தொடர்பு அம்பலப்படும்போது திடுக்கிட வைக்கிறது.
சுனைனா சில நிமிடங்கள் ஆவேசமாய் வந்து, கிளுகிளு ஆட்டம் போட்டு காணாமல் போகிறார். சம்பத், ஜெயபிரகாஷ், ஸ்ரீமன், ஜான் விஜய் கேரக்டர்கள் நேர்த்தி... பணக்கார வில்லன்களாக வரும் ஜே.டி சக்கரவர்த்தி மனோஜ் பாஜ்பாயின் சைக்கோத்தன விளையாட்டுகள் பரபரக்க வைக்கிறது.
நல்லவர்கள் என அடையாளம் காட்டப்பட்டவர்கள். வில்லன்களோடு கைகோர்ப்பது இன்னொரு அதிர்வு. ஹைடெக் கதை களத்தில் சஸ்பேன்ஸ், திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் திரு... காட்சியோட்டத்தில் இருந்த அழுத்தம் கதையிலும் இருந்திருந்தால் இன்னும் பளிச்சிட்டு இருக்கும்.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை பலம் சேர்க்கிறது. ரிச்சர்ட் எம். நாதன் கேமரா பாங்காக் அழகை அள்ளுகிறது.