குற்றாலத்தில் வெளிநாட்டு தம்பதியை ஒரு கும்பல் கொல்கிறது. கொலையாளிகளை பிடிக்க சி.பி.ஐ. அதிகாரி சக்கரவர்த்தி வருகிறார்.
விசாரணையில் போலீஸ் உதவியுடன் கடத்தல், கொலைகளில் ரவுடி கும்பல் ஈடுபடுவது தெரிகிறது. அவர்களை கையும் களவுமாய் பிடித்து எப்படி கூண்டோடு அழிக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...
ரவுடி கும்பலுக்கும் சி.பி.ஐ. அதிகாரிக்குமான மோதல்களை விறுவிறுப்பாக காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர் புருஷோத்தமன். சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் கச்சிதமாய் பொருந்துகிறார் சக்கரவர்த்தி. எம்.ஜி.ஆரை நினைவூட்டும் அவரது மிடுக்கான தோற்றம் கதைக்கு பிளஸ். வில்லன்களுடன் மோதும் சண்டையில் அனல் பறத்துகிறார்.
உதவி பெண் அதிகாரிகளாக வரும் அமிதா, பிரியங்கா, துப்புதுலக்கும் பணி எதுவும் செய்யாமல் கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுகிறார்கள். வில்லன்களாக வரும் அண்ணன், தம்பிகள் சிங் கார்த்திக், ராக் மிரட்டுகின்றனர். கஞ்சா விற்கும் பெண் அன்பு ராணி, இன்ஸ்பெக்டர் சேது கேரக்டர்களும் கச்சிதம்.
திரைக்கதையை இன்னும் வலுவாக செதுக்கி இருக்கலாம். போலீசை ஓடவிட்டே நிறைய சீன்களை நகர்த்துவது சலிப்பு. வி.தஷியின் பின்னணி இசை பெரிய பலம். பாடல்களும் தாளம் போட வைக்கிறது. ஜி.கனகராஜ் ஒளிப்பதிவு குற்றாலம் அழகை அள்ளுகிறது.