பார்த்தவுடன் காதல்! புரிதல் வரும் முன்னே கல்யாணம்! கல்யாணத்திற்குள் நுழையும் தவறான
கலாச்சாரம்! அவசியம் ஏற்பட்டால் தவிர்க்கமுடியாத விவகாரத்தை வழக்கமான ஒன்றாக்கிவிட்ட
திருமணங்களுக்கு அறிவுரை சொல்ல இஷ்டப்பட்டிருக்கிறார்கள்.
விமல் ஐ.ஐ.டி.யில் படித்து விட்டு வேலை தேடுகிறார். நிஷா அகர்வாலும் அதே முயற்சியில் இருக்கிறார். இருவருடைய முதல் சந்திப்பு சாதாரணமாக இருந்தாலும், அதற்கடுத்த சந்திப்புகள் அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்துகிறது.
ஒருகட்டத்தில் இவர்களுக்குள்ளே நடைபெறும் இந்த மோதல் காதலாக மாறுகிறது. அதேவேகத்தில் தங்களது உடல் இச்சைகளையும் பூர்த்தி செய்துகொண்டு கல்யாணமும் செய்துகொள்கிறார்கள்.
இருவருக்கும் இல்லாத புரிதலால் திருமணத்திற்கு பின் முதல் சண்டையிலேயே பிரிந்துவிட முடிவு செய்து, விவகாரத்துக்கு முயற்சிக்கிறார்கள். விவாகரத்து கிடைப்பதற்கு முன்பே இருவரும் இன்னொரு கல்யாணத்திற்கு தயராகிறார்கள். முடிவு, இருவர் மனதிலும் கொஞ்சமேனும் ஒட்டியிருக்கும் தமிழ் கலாச்சாரத்தோடு அமைகிறது.
ஐ.டி. டாப்பராக விமல். மனிதருக்கு பழக்கமே இல்லாத ஏரியா என்பதால் தடுமாறியிருக்கிறார். இருந்தாலும் சந்தானத்திடம் கஞ்சத்தனம் காட்டுவதிலும், இளம் கணவனாக அவசரம் காட்டுவதிலும், கோபத்தில் வார்த்தையை விடுவதிலும், முடிவெடுக்க முடியாமல் கியூப்பை திருகிக்கொண்டே இருப்பதிலும் விமல் சரியாக செய்திருக்கிறார். நடனமும் நன்றாக ஆடியிருக்கிறார்.
நிஷா அகர்வால் ப்ரெஷ்ஷான முகம். முகத்தைவிட தொப்புளைத்தான் அதிகமாக காட்டியிருக்கிறார்கள். விமலிடம் போனில் கடலை போடும்போது, இன்னொரு நண்பனை வெயிட்டிங்கில் விடுவதும், இருவரிடமும் அம்மாவிடம் பேசுகிறேன் என்று கதை விடுவதும் தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத ஹீரோயினை காட்டியிருக்கிறார்கள்.
அதேபோல், இளம் மனைவியாக நெருக்கம் காட்டுவதிலும், விமலின் சந்தேக வார்த்தைக்கு பதிலுக்கு பதில் மடக்குவதிலும் அசத்தல்.
படத்தில் பெரிய பிளஸ் சந்தானம். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ஒவ்வொன்றுக்கும் அவர் அடிக்கும் பஞ்ச் நம் வயிற்றை பதம் பார்த்துவிடுகிறது. சிக்கனை பெட் வைத்து நாயோடு சீட்டு விளையாடுவதெல்லாம் நினைத்து நினைத்து சிரிக்கிற காமெடி.
விமலின் அம்மாவாக வரும் யுவராணி, நமோ நாராயணன், சார்லி ஆகியோர் அவ்வப்போது வந்து போனாலும் மனதில் நிற்கிறார்கள்.
தமனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் வளர்ந்து வரும் இசையமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார்.
சேகர் ஜோசப்பின் ஒளிப்பதிவில் பாடல்களில் இளமை தெரிகிறது. பெரும்பாலும் இண்டோர்க்குள்ளேயே காட்சியமைப்பு இருந்தாலும் யதார்த்தமான வெளிச்சத்தில் ஒன்ற வைக்கிறார்.
படத்தின் இன்னொரு முக்கிய அம்சம், இயக்குனர் பிரேம் நிஸாரின் வசனம். இருவரும் உடலை பகிர்ந்து கொண்டபிறகு, நாயகி ‘வழக்கமா தப்பு செய்யுற பொண்ணுங்க, இது முடிஞ்சதும் அழுவாங்க. நான் ஏன் அழல’ என சொல்லும் வசனமும், ‘ஆம்பளைங்க மட்டும் பொண்ணு பாக்கணும்னு வந்து பொண்ணுங்களை செலக்ட் பண்ணுவாங்க. நாங்க மட்டும் பாய்பிரெண்ட் வைத்து ஒருத்தனை செலக்ட் பண்ணக்கூடாதா?’ என்பது போன்ற வசனங்கள் ஆங்காங்கே பளீச்சிடுகிறது.
அழுத்தமே இல்லாத காட்சிகளில் விமல், நிஷா அகர்வாலின் காதல் பிரிவு, கல்யாண முறிவு, க்ளைமாக்ஸ் ஆகியவை நம்மை உணர்வோடு ஒன்ற வைக்கவில்லை. லேடிஸ் ஹாஸ்டலை காட்சிப்படுத்தியதில் நம்பகத் தன்மையே இல்லை.
ஒரு பெண் தான் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறவரிடம் தான் கல்யாணத்துக்கு முன்னாடியே செக்ஸ் வைத்ததெல்லாம் சொல்வது யதார்த்தமே இல்லை. இரண்டாவது கல்யாணம் செய்யும் பெண்ணை செகன்ட் ஹேண்ட் பைக்கோடு ஒப்பிட்டு பேசுவது மட்டமான ரகம். சென்சாரில் கவனித்திருக்கலாம்.
மற்றபடி திரைக்கதை அமைப்பிலும், இளமையான காட்சிகளிலும் இஷ்டம் பார்க்கக்கூடிய படம்.