வெட்டியாக ஊர் சுற்றும் ஹீரோவுக்கு ஹீரோயினை கண்டதும் காந்தத்தைக் கண்ட இரும்பாக காதல் வருகிறது. அவரை காதலிப்பதற்காக அவர் பின்னாலேயே சுற்றுகிறார்.
ஹீரோவுடைய அக்கா கணவர் பாண்டியராஜன் பயிற்சியாளராக இருக்கும் பெண்கள் கால்பந்து அணியில் ஹீரோயினும் இருக்கிறார். கால்பந்து பற்றிய விவரமே தெரியாத பாண்டியராஜனால் அந்த அணி கேவலப்படுகிறது.
இதனால் ஹீரோவை பெண் வேஷமிட்டு போட்டியில் இறங்க வைக்கிறார் பாண்டியராஜன். முதலில் மறுக்கும் ஹீரோ, அணியில் ஹீரோயின் இருப்பதைக் கண்டு சம்மதிக்கிறார். ஹீரோவின் வேஷம் ஒருநாள் ஹீரோயினுக்கு தெரிந்துவிட அவரை அவள் வெறுக்கிறாள்.
ஹீரோ தன் உண்மையான காதலை வெளிப்படுத்தி அந்த அணிக்கு அவரே பயிற்சியாளராக மாறி, அணியை வெற்றிபெற வைத்து, காதலிலும் வெற்றி பெறுகிறார்.
ஹீரோவாக தேஜ். அவரே கதை, திரைக்கதை எல்லாம். எம்.ஜி.ஆரைப் போல் வயதான பாட்டிக்கு உதவி செய்கிறார். ரஜினியைப் போல் பஞ்ச் டயலாக் பேசுகிறார். மற்றபடி சொல்லும்படி எதுவும் இல்லை. அழகாக துறுதுறுவென்று இருப்பது மட்டும் கவர்கிறது. ஹீரோயினாக வரும் ரஷ்மி பாடல்களில் மட்டும் வந்து ஆடிவிட்டு போகிறார்.
படத்தை இருந்து பார்க்க வைப்பது பாண்டியராஜன் மட்டும்தான். அதுவும் கால்பந்தை பற்றி எதுவும் தெரியாமல் பொய் சொல்லி புத்தகத்தை பார்த்து பார்த்து பயிற்சி கொடுப்பது சிரிப்பை வரவழைக்கிறது.
பாடல்களில் ஒளிப்பதிவின் ரசனை தெரிகிறது. சுரேஷின் கலை இயக்கத்தில் ஒன்றிரண்டு இடங்கள் அழகாக இருக்கிறது. பிரதாப் இசையில் உன்னழகில்தானே பாடல் மட்டும் கேட்க இனிமை.
படத்தின் திரைக்கதையில் சொதப்பியிருக்கிறார்கள். ஹீரோ பெண் வேஷமிட்டு கால்பந்து விளையாடுவதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
கதைக்கு சம்பந்தம் இல்லாத காட்சிகள், நடிக்க வேண்டிய கதையில் ஹீரோயிசம் காட்ட நினைக்கிற ஹீரோ, திட்டமிடல் இல்லாத திரைக்கதை போன்றவற்றால் ‘காந்தம்’ ஈர்க்க முடியாமல் போகிறது.
கதைக்கு சம்பந்தம் இல்லாத காட்சிகள், நடிக்க வேண்டிய கதையில் ஹீரோயிசம் காட்ட நினைக்கிற ஹீரோ, திட்டமிடல் இல்லாத திரைக்கதை போன்றவற்றால் ‘காந்தம்’ ஈர்க்க முடியாமல் போகிறது.