இயக்குனர் வீ. சேகரிடம் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜி. ராஜேந்திரன் இயக்கியுள்ள படம்தான் இந்த 'கொண்டான் கொடுத்தான்'.
நான்கு தலைமுறைகளாக தங்களுக்குள்ளாகவே பெண் கொடுத்து, பெண் எடுத்து வரும் இரு குடும்பத்திற்குள் ஏற்படும் பிரச்சினைகள்தான் இப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.
அதை சில எதிர்பாராத திருப்பங்களோடும், கிராமத்து காட்சிகளோடும் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். இனி கதைக்கு வருவோம்.
இளவரசு- சுலக்ஷனா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். தன் மகனை கலெக்டருக்கு படிக்க வைக்கிறார் இளவரசு. தனது மகளான அத்வைதாவை தனது தங்கை மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அவரது தங்கை மகனுக்கு பக்கபலமாகவும் இருக்கிறார்.
இளவரசுவின் தங்கை குடும்பமான மீரா கிருஷ்ணன்- எல். ராஜா தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள். மீரா கிருஷ்ணனின் மகனான கதிர்காமன் ஓரளவு படித்திருந்தாலும் ஊர் சார்பில் கபடி வீராக வலம் வருகிறார். மீரா கிருஷ்ணனின் மகள் பட்டணத்தில் படித்து வருகிறார்.
கதிர்காமனுக்கு அத்வைதா முறைப்பெண் என்பதால் சிறுவயதில் இருந்தே இருவரும் அன்னியோன்யக் காதலர்களாக வலம் வருகிறார்கள். கபடியில் கதிர் காமனை ஜெயிக்க முடியாத வில்லன் ராஜ்கபூரின் மகன், கதாநாயகனை வேறு வகையில் பழிவாங்க துடிக்கிறார். அதற்கேற்றார் போல் ராஜ்கபூர் சகுனி வேலை பார்க்கிறார்.
இந்நிலையில் இளவரசுவின் மகனுக்கும், அவரது மச்சினன் ராஜாவின் மகளுக்கும் திடீர் திருமணம் செய்து வைக்கிறார்கள். முதலிரவில் மீராகிருஷ்ணனின் மகள் ஓடிப்போய் விட, இளவரசுவின் மகன் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் இரு குடும்பமும் பிரிந்து போகிறது. மகனைப் பறிகொடுத்த கோபத்திலும், ராஜ்கபூரின் நரித்தனத்தாலும் தனது மகளை ராஜ்கபூரின் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன் என்று ஊர் முன்னிலையில் வெற்றிலை பாக்கு மாற்றிக் கொள்கிறார்.
கபடி பகையை மறக்காத ராஜ்கபூரின் மகன், கதாநாயகனிடம் வம்பிழுத்து ''என்னை கபடிப் போட்டியில் ஜெயித்துவிட்டால் உன் மாமன் மகளை நீயே கட்டிக்கொள், நான் ஜெயித்தால் நீ பாதி மீசை எடுத்துவிட்டு ஊரில் அசிங்கப்பட வேண்டும்'' என சவால் விடுகிறார். கதாநாயகனும் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். இளவரசுவின் மகன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? கபடியில் யார் வென்றது? பிரிந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதற்கெல்லாம் எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்து படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குனர் ராஜேந்திரன்.
ராசு பாத்திரத்தில் வரும் கதிர் காமனும், செவ்வந்தி பாத்திரத்தில் வரும் அத்வைதாவும் தமிழுக்கு புதுமுகங்கள். இருவரும் தங்களின் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். இவர்கள் இவருவருக்கும் வரும் காதல் காட்சிகளில் குறம்புத்தனம் தெரிகிறது. நீண்ட இடைவெளிக்குப்பிறகு சுலக்ஷனா குறைவான காட்சிகளில் வந்தாலும், பாத்திரம் அறிந்து நடித்திருக்கிறார்.
இவரது அண்ணன் கணேசனாக வரும் ராஜனும் தன் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். செல்லையா பாத்திரத்தில் வரும் இளவரசு அப்பாத்திரமாகவே வாழ்திருக்கிறார். தனது தங்கை மகனுக்காக ஊரார் காலில் விழுவது. தனது மகன் இறந்ததைக் கண்டு துடிப்பது, தனது தங்கையிடம் கோபத்தில் சீறுவது என மனிதர் நடிப்பில் வெளுத்து வாங்குகிறார்.
பாலாமணி கேரக்டரில் வரும் மீரா கிருஷ்ணன் தனது அண்ணன் இளவரசுக்கு சற்றம் சளைக்காமல் நடித்திருக்கிறார். அண்ணன் காலில் காயம் பட்டதை கண்டு பதறுவது, அண்ணன் வீட்டுக்கு தனியாளாய் சென்று நியாயம் கேட்பது என அப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். காமெடிக்கு கஞ்சா கருப்பும் அவரது மனைவியாக வரும் நாகமல்லியும் இருக்கிறார்கள். வில்லனாக வரும் ராஜ்கபூரின் நடிப்பு நரித்தனம். அவரது அல்லக்கையாக வரும் மனோபாலாவின் காமெடி சில இடங்களில் கலகலப்பூட்டுகிறது.
தேனிசைத் தென்றல் தேவாவின் இசையமைப்பு படத்திற்கு பக்கபலம். நா.முத்துக்குமாரின் வரிகளில் ''தஞ்சாவூர் கோபுரம் அழகு...'' பாடல் எஸ். பி.பி.யின் குரலில் நமை வசீகரிக்கிறது. கபிலனின் வரிகளில், தஞ்சை செல்வி குரலில் வரும் ''தில்லானா பாட்டுக்காரி...'' பாடல் தேவாவின் கலக்கல் கானா ஸ்டைல் ரகம்.
கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு என அனைத்தையும் கையாண்ட இயக்குனர் ராஜேந்திரனை குடும்பப்படம் கொடுத்தமைக்கு பாராட்டலாம். இரு குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் நிகழ்வுகளை கலகலப்பாகவும் கண்ணியமாகவும் கொடுத்திருக்கிறார். ஆரம்ப காடட்சியில் ஒரே வீட்டில் கல்யாண சத்தமும், சங்கு சத்தமும் நுழையும் காட்சியை அமைத்து முதல் திருப்பத்தை கொடுகிறார். அதன் பிறகு விரியும் காட்சிகளில் இன்னும் சில திருப்பங்களைத் தந்து, இறுதியில் வெற்றியும் பெறுகிறார்.
சீரியல் தனமான சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். அது படத்தின் வேகத்திற்கு தடையாக இருக்கிறது. கிராமத்து காட்சிகளை இன்னும் மெருகேற்றி இருந்திருக்கலாம். நாயகனின் நடிப்பு ஒரு சில இடங்களில் எடுபடவே வில்லை. இவயெல்லாம் படத்தின் குறைகள். 'கொண்டான் கொடுத்தான்' - குடும்ப உறவுகளைக் கொள்ளையடிப்பான்.