விண்ணைத் தாண்டி வருவாயா, கோ படங்களின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எல்ரெட் குமார் இயக்குனராகவும் அவதாரமெடுத்திருக்கும் படம் முப்பொழுதும் உன் கற்பனைகள். குடைக்குள் மழை, காதலில் விழுந்தேன் போன்ற படங்களில் பார்த்த சைக்கோத்தனமான காதல்தான் படத்தின் மைய இழை.
சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதர்வா ஆரம்பத்திலேயே ஒரு கொலையை செய்கிறார். அவருடைய காதலியான அமலாபால் பெங்களூரில் இருக்கிறார். வார விடுமுறையில் தனது காதலியுடன் பெங்களூரில் பொழுதைப் போக்கும் அதர்வா வார நாட்களில் சென்னை திரும்பி விடுகிறார்.
அவருடைய நிறுவனத்திற்கு அமெரிக்காவிலிருந்து உயரதிகாரி வருகிறார். உயரதிகாரி யாரென்றால் அதுவும் அமலாபாலே. ஆனால் தனது பெங்களூரில் இருக்கும் காதலியை உருகி உருகி காதலிக்கும் அதர்வா, காதலியைப் போன்று இருக்கும் உயரதிகாரியை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இதனிடையே இரண்டாவது கொலையும் செய்து விடுகிறார் அதர்வா...
உயரதிகாரியாக வரும் அமலா பால், தன்னுடையே புராஜெக்ட் மேட்டான அதர்வா தன்னை ஏன் கண்டு கொள்ளவில்லை. தன்னை தெரியாதவன் போல் ஏன் அவர் இருக்கிறார் என்பதை ஆராய்கிறார். ஆராய்வின் முடிவில் அதர்வா இரு கொலைகளை செய்ததும், அந்த கொலைகள் தனக்காகத்தான் செய்யப்பட்டது என்பதை அறிந்தும் திகிலடைகிறார்.
அதர்வா ஏன் அமலா பாலை தெரியாதது போல் நடந்து கொண்டார்? இரண்டு கொலைகளை அதர்வா ஏன் செய்தார்? இறுதியில் அதர்வா என்ன ஆனார்? பெங்களூரில் இருக்கும் அமலா பால் என்ன ஆனார்? ஆகிய கேள்விகளுக்கு முடிவில் பதில் சொல்லி படத்தை முடித்திருக்கிறார் எல்ரெட் குமார்.
அதர்வாவிற்கு இது இரண்டாவது படம். சிட்டி பாய் கேரக்டரில் கச்சிதமாகப் பொருந்தும் அதர்வா நடிப்பிலும் அசத்துகிறார். அம்மா பாசத்திலும் சரி, காதலில் உருகுவதும் சரி, சண்டைக் காட்சிகளும் சரி எல்லாவிதத்திலும் அதர்வா அசத்தியிருக்கிறார்.
அழகுப் பதுமையாக அமலா பால். அதிகாரியாகவும் அன்பான காதலியாகவும் நடித்து படத்திற்கு மெருகேற்றியிருக்கிறார். அதர்வாவுடனான காதல் காட்சிகளில் நெருக்கமாய் நடித்திருக்கிறார். இவருடைய உதவியாளராக வரும் சந்தானம் சில காட்சிகளே வந்தாலும் சிரிக்க வைத்து விட்டு போகிறார்.
சிறுவயது அதர்வா வேடத்தில் வரும் சிறுவனும், அதர்வாவின் அம்மாவும் சிறப்பான தேர்வு.
'இசை இளவல்' ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் அசத்தல் ரகம். கவிஞர் தாமரையின் வரிகளில் அனைத்து பாடல்களும் அருமை. சுனந்தா பாடல் முணுமுணுக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. தாலாட்டுப் பாடல் நமது மனதை வருடுகிறது. பின்னணி இசையிலும் முத்திரை பதிக்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
ஜி.வி. பிரகாஷின் இசையைப் போல் சக்தியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்க்கிறது. இவரது கேமரா கண்கள் காட்சியை நேர்த்தியாக சிறை பிடித்து, நம் கண் முன்னே உலவ விடுகிறது. ஆடை வடிவமைப்பாளர் தீபாலியின் பங்கு இப்படத்தில் குறிப்பிட்டாக வேண்டும். அதர்வா, அமலா பால் ஆகியோர்களுக்கான ஆடை வடிவமைப்பு கண்ணைக் கவர்கிறது. சண்டை காட்சிகளை சிறப்பாக அமைத்த ராஜசேகருக்கு நன்றி.
மூன்று தளங்களில் நடக்கும் கதைக்களத்தை இறுதியில் ஒரே தளத்தில் இணைத்து தந்திருக்கும் இயக்குனர், திரைக்கதையில் ரசிகர்களை குழப்பமடைய செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் தெரிகின்றன.
முப்பொழுதும் உன் கற்பனைகள் - சீக்கிரம் கலைந்து விடும் கற்பனைகள்