டி.ரமேஷ் செல்வன் இயக்கத்தில் புதுமுகங்கள் மனோ, ஐரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நுங்கம்பாக்கம்’ படத்தின் முன்னோட்டம்.
நுங்கம்பாக்கம்
பதிவு: ஜூலை 23, 2019 15:44
ஐரா, மனோ
விஜயகாந்த் நடித்த ‘உளவுத்துறை’, சத்யராஜ் நடித்த ‘கலவரம்’, அருண்விஜய் நடித்த ‘ஜனனம்’ உட்பட பல படங்களை இயக்கிய டி.ரமேஷ் செல்வன், இப்போது ரவிதேவன் தயாரிப்பில் புதுமுகங்கள் மனோ, ஐரா நடிப்பில் ‘நுங்கம்பாக்கம்’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். முக்கிய வேடத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு : ஜோன்ஸ் ஆனந்த், இசை : ஷாம் டி ராஜ், கலை : ஜெய்சங்கர், எடிட்டிங் : மாரி, தயாரிப்பு நிர்வாகம் : கே.சிவசங்கர், கதை, வசனத்தை ஆர்.பி.ரவி எழுதி இருக்கிறார். திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் டி.ரமேஷ் செல்வன்.
நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட கொடூரத்தை தான் இயக்குனர் படமாக்கியுள்ளார். இப்படத்தில் நடந்த சம்பவங்கள் அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும், மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிறைய சம்பவங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது என இயக்குநர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
Related Tags :