பிரபல இயக்குனர் ஒருவர் நடிகர் படத்தில் வேலை செய்து கடுப்பாகி இருக்கிறாராம்.
கடுப்பான இயக்குனர்... கண்டுகொள்ளாத நடிகர்
பதிவு: நவம்பர் 02, 2020 20:21
கிசுகிசு
உறியை அடித்து பிரபலமான இயக்குனர், பிரகாசமான நடிகர் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தாராம். இயக்குனரின் திறமையை அறிந்த நடிகர் தான் நடிக்கும் அடுத்த படத்தில் வசனம் எழுத வைத்தாராம்.
இயக்குனர் எழுதிய வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறதாம். இருப்பினும் அந்த இயக்குனருக்கு உரிய மரியாதையை படக்குழுவினர் தர மறுத்து வருகிறார்களாம். இதனால் கடுப்பான இயக்குனர் நடிகரிடம் கேட்க முயற்சி செய்து வருகிறாராம். ஆனால் நடிகரோ கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறாராம்.
Related Tags :