இளம் நடிகராக இருக்கும் சிலம்பரசன் வீட்டின் முன்பாக அவரது ரசிகர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சிலம்பரசன் வீட்டு முன்பு ரசிகர்கள் போராட்டம்
பதிவு: ஜனவரி 06, 2021 18:03
சிம்பு
தமிழ் சினிமாவின் இளம் நடிகராக இருப்பவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படம் உருவாகி உள்ளது. சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சிலம்பரசன் வீட்டின் முன்பு ரசிகர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
தற்போது ரசிகர் மன்றத்தில் நிலவிவரும் குழப்பத்தால் ரசிகர்கள் நிரந்தர முடிவை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும், சிம்பு ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவரை மாற்ற கோரியும் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
Related Tags :