சமீபத்தில் கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கு பிரபல நடிகர் படப்பிடிப்பு தளத்தில் சிறப்பான வரவேற்பு கொடுத்துள்ளார்.
காஜல் அகர்வாலுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த பிரபல நடிகர்
பதிவு: டிசம்பர் 15, 2020 23:11
கணவருடன் காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் தேனிலவு கொண்டாட கணவருடன் மாலத்தீவுக்கு சென்றார். தற்போது தேனிலவை முடித்து விட்டு நாடு திரும்பி இருக்கும் அவர், ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
திருமணத்துக்கு முன்னர் இந்தியன் 2, ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வந்தார் காஜல் அகர்வால். இந்நிலையில் தேனிலவை முடித்த காஜல் அகர்வால் சிரஞ்சீவியின் ஆச்சர்யா படப்பிடிப்பில் இன்று இணைந்தார்.
காஜல் அகர்வால் உடன் அவரது கணவர் கவுதம் கிச்சலும் வந்திருந்தார். இருவரையும் சிரஞ்சீவி உள்ளிட்ட படக்குழுவினர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
Related Tags :