தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
பதிவு: நவம்பர் 29, 2020 18:29
தனுஷ், ஐஸ்வர்ய லட்சுமி
மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி, கடந்தாண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஆக்ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார்.
இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜகமே தந்திரம் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே, இன்னொரு படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
அந்தப்படத்தில் பிராமண பெண் கதாபாத்திரத்திற்கு தான் சரியாக பொருந்தினாலும், தனக்கு அந்த பாஷையை சரியாக பேச தெரியவில்லை என்ற காரணத்தால் அந்தப்படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக கூறியுள்ள ஐஸ்வர்ய லட்சுமி, அது எந்தப்படம் என்பதை தெரிவிக்கவில்லை.
Related Tags :