பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரெஜினா தற்போது பிளாஷ் பேக் என்னும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிளாஷ் பேக்கில் ரெஜினா
பதிவு: நவம்பர் 23, 2020 19:38
ரெஜினா
தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், ‘வேதாளம், அரண்மனை 1 மற்றும் 2, மாயா, பாகுபலி 1 உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை, சமீபத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் நடித்த "சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை தயாரித்து இருந்தார்.
தற்போது மகாபலிபுரம், கொரில்லா வெற்றிப்படத்தை தொடர்ந்து டான் சேண்டி கதை, திரைக்கதை வசனத்தில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் ரமேஷ் பி பிள்ளை.
ரெஜினா கசென்டிரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது..
அழகிய காதல் கதையினை முற்றிலும் அழகான பின்னனியில் அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. ரெஜினாவுடன் இளவரசு, அனுசுயா, உமா ரியாஸ், ஆர்யன், 96 பட புகழ் சூர்யா, மெர்சல் படபுகழ் அக்ஷன்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
Related Tags :