சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபாலின் திருமண புகைப்படம் வெளியான விவகாரத்தில் ஐகோர்ட்டு திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருமண புகைப்பட விவகாரம் - அமலாபாலுக்கு ஐகோர்ட்டு திடீர் உத்தரவு
பதிவு: நவம்பர் 04, 2020 12:19
அமலாபால்
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை அமலாபால். இவர், இயக்குனர் விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் அமலாபாலுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. அமலாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பவ்னிந்தர் சிங் சிறிது நேரத்தில் அவற்றை நீக்கிவிட்டார்.
இந்த நிலையில் நடிகை அமலாபால் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அந்த மனுவில், முன்னாள் நண்பர் பவ்னிந்தர் சிங் என்னுடன் எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில், எனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார். புகைப்படங்களை வெளியிட அவருக்கு தடை விதிக்க வேண்டும். அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :