ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கும் புதிய படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய நடிகர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சீனு ராமசாமி படத்திலிருந்து சர்ச்சை நடிகர் நீக்கம்
பதிவு: ஜனவரி 27, 2020 11:34
சீனு ராமசாமி
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல், மாமனிதன் போன்ற படங்கள் வெளிவராமல் இருக்கின்றன. இந்நிலையில், ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டுள்ளார். இப்படத்தில் மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஷேன் நிகம் நடிப்பதாக இருந்தது.
மலையாள திரையுலகில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அவருக்கு திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள நடிகர் சங்கம் தலையிட்டு இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது. மேலும் அவர் 2 மலையாள படங்களில் நடித்த பிறகு தான் வேறு படத்தில் நடிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக ஷேன் நிகமால் சீனு ராமசாமியின் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியாமல் போனது. இதனால் சீனு ராமசாமியின் படத்திலிருந்து ஷேன் நிகம் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாம்பியன் படத்தில் நடித்த விஸ்வா நடிப்பார் என கூறப்படுகிறது.
Related Tags :