30 ஆண்டுகளுக்கு பின் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து சரிலேறு நீகெவரு என்ற படத்தில் விஜயசாந்தி நடித்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கு பின் மகேஷ் பாபுவுடன் நடிக்கும் விஜயசாந்தி
பதிவு: ஆகஸ்ட் 14, 2019 09:51
விஜயசாந்தி , மகேஷ் பாபு
பாரதிராஜாவின் ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அறிமுகமான விஜயசாந்தி 1980-களில் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். இரண்டு மொழிகளிலும் வெளியான வைஜயந்தி ஐ.பி.எஸ் படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து பேசப்பட்டார் விஜயசாந்தி. இந்த படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
2006-ல் சினிமாவை விட்டு ஒதுங்கி ஆந்திர அரசியலில் குதித்த அவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். மகேஷ்பாபு கதாநாயகனாக வரும் தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயசாந்தி நடிக்கிறார். தமிழிலும் இதை வெளியிடுகின்றனர். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.2 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி உள்ளது. விஜயசாந்தி மேக்கப் போடும் தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார்.
கடந்த 1989-ம் ஆண்டு வெளியான கொடுக்கு டிட்டின்னா கபூரம் படத்தில் விஜய் சாந்தியின் மகனாக மகேஷ் பாபு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :